![]() |
|
காதல் கிறுக்கனாய்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் கிறுக்கனாய்... (/showthread.php?tid=3912) Pages:
1
2
|
காதல் கிறுக்கனாய்... - kuruvikal - 07-15-2005 <img src='http://img311.imageshack.us/img311/6126/brain1mi.jpg' border='0' alt='user posted image'> <b>வண்ண வண்ண நினைவுகள் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ண மனத் தோட்டத்தில் வட்டமடிக்க வஞ்சி மலரவள் வாசம் நாடி வந்தேன் வலம்..! வடிவுக்கு அரசியவள் வஞ்சிக்க வந்தாளோ வசீகரிக்க வந்தாளோ வம்புகள் பண்ணியே வசமாக்கிக் கொண்டாள் வஞ்சகமில்லா நானும் வஞ்சிக் கொடியவள் வலைக்குள் வலிந்தே சிக்கினேன் வசந்தம் அது என்று...! வந்தவள் வஞ்சியல்லோ வஞ்சிக்க மறப்பாளோ....??! வண்ணப் படமாய் வண்ணப் புன்னகை தந்து வனப்போடு வரவழைத்து வந்ததும் வசமாய் மனதோடு பூட்டிவைத்து..... வசந்தமும் தந்து வாட்டமும் தருகிறாள் வகை தொகையாய் வார்த்தைகள் வருத்தமின்றி உதிர்க்கிறாள் வரவு வைக்கட்டாம் ஊடலும் கூடலும் வழக்கப்படுத்தவும் வற்புறுத்திறாள்...! வர வர வழக்கங்கள் வழமைகள் மாறுது வந்தவள் ஆட்சி வந்திவன் மனதிலோங்க வர்க்கமாய் இருந்தவன் வடிவிழந்தே போகின்றான்...! வந்தது என்ன வஞ்சிப் பயலிடம்... வடிவாய் இருந்தவன் - சில கணம் வதங்குகிறான் வாடுகிறான் வசனங்கள் உதிர்கின்றான் தனிமையில் - மறு கணம் வசந்தத்து அவன் மலர் போல் வதனம் மலர்கிறான் வழிகிறான் குழைகிறான் வானம் போல் பொழிகிறான் அன்பு..! வழமைகள் வாழினும் மாறினும் வகையாய் இவன் வழி நடக்கிறான் காதல் கிறுக்கனாய் வாழும் தன்னவள் வழுவில்லா நினைவின் துணையோடு...!</b> - shanmuhi - 07-15-2005 வடிவாய் இருந்தவன் வதனம் மலர்ந்து வானம் போல் பொழிந்த அன்பில் வழி நடக்கின்றான் காதல் கிறுக்கினாய் வடிவாய் வடித்த கவிதையும் அருமை வழுவில்லா நினைவின் துணையோடு நிஜமதில் நீக்கமற என்றும் வாழ்ந்திட வாழ்த்துக்கள்... - அருவி - 07-15-2005 <i><b> Quote:வஞ்சிக்க வந்தாளோ</b></i> வாழ்வின் உண்மைதனை வார்த்தையிலே வடித்திட்ட கவிஞருக்கு வாழ்த்துக்கள். - வெண்ணிலா - 07-15-2005 Quote:வந்தது என்னவாழ்த்துக்கள் குருவியண்ணா. - Thala - 07-15-2005 குருவிகள்!... உங்களது கவிதைகளை எப்போதும் ஆர்வமாய் வாசிக்கிறனான். ஆளமான சமுதாய, உணர்வுகளின் கண்ணோட்டம் இருக்கும். ஆனால் இந்தக்கவியில நிறைய சோகம் நிறைந்து இருக்கு தயவு செய்து சோகமாய் எழுதாதேங்கொ.. இது விமர்சனம் இல்லை வேண்டுகோள்.... (வேண்டுகோள்விடுக்க உரிமை எடுத்திருக்கிரேன் தவரென்றால் மன்னித்து விடுங்கள்) - அனிதா - 07-15-2005 Quote:வசமாய் மனதோடு பூட்டிவைத்து..... நல்லா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-15-2005 காதல் கிறுக்கன்.. நிஜக்கிறுக்கன் ஆகாமல் இருந்தா சரி தான். இருக்க வாழ்த்துக்கள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 07-15-2005 வாழ்த்துக்கள் குருவி அண்ணா...என்ன நிஜக்கிறுக்கனாக மாற்றிவிட்டாவா மலர் அக்கா? குருவி அண்ணா மட்டும் விதி விலக்கா என்ன...நடத்துங்க நடத்துங்க....இந்த நேரம் பார்த்து குளம் இல்லாமல் போட்டாரே......:wink: - kuruvikal - 07-15-2005 வாழ்த்துச் சொன்ன உள்ளங்களுக்கு நன்றிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தல... உங்க கருத்து மிகவும் தயவுடன் கருத்தில் கொள்ளப்படும்...! உங்கள் பணிவான வேண்டுதல் மற்றும் பலருக்கு உதாரணமாகவும் இருக்கட்டும்..! நன்றிகள்..! - MUGATHTHAR - 07-15-2005 வடிவுக்கு அரசியவள் வஞ்சிக்க வந்தாளோ வசீகரிக்க வந்தாளோ வம்புகள் பண்ணியே Quote:வசமாக்கிக் கொண்டாள் பிறகென்ன நிஐக் கிறுக்கன் ஆவது உறுதிதானே.....குருவிகள் வாழ்த்துக்கள் கவனமப்பு - வினித் - 07-15-2005 «¼¼¡ ±ýÛõ ´Õ ¸¡¾ø கிறுக்கன் வாழ்த்துக்கள் ¸¾¡Äø ±ýÛõ ´Õ ¸Å¢ýÂý ¯ÕŸ¢Å¢ð¼ý - kavithan - 07-15-2005 Quote:வண்ண வண்ண நினைவுகள்நீங்களும் தோட்டத்தில் வண்ணாத்துப்பூச்சி பிடிக்க சுத்துறியளோ ஆ.. மலரண்ணி தோப்பிலை எல்லாத்தையும் வண்ணாத்துப் பூச்சிகளாக்கி வலம் வாறாராம் கவனம் வண்ணாத்துப் பூச்சிகளை தோட்டப் பக்கம் கலைச்சு விடுங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: வாழ்த்துக்கள் அண்ணா கவிதை நன்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> . ஆனால் கிறுக்கன் ஆகிட்டியள் வேகமா :wink:
- Mathan - 07-16-2005 காதலில் கிறங்கி அதனால் கிறுக்கனாய் எழுதிய கவிதை நன்றாக இருக்கிறது. காதல் தந்த கிறக்கத்தில் நன்றாகவே மயங்கி நன்றாக ஆழ்ந்திருக்கிறீர்கள் போல இருக்கின்றது ... மீள விரும்பாத மயக்கம் அல்லவா அது. - hari - 07-16-2005 நான் அப்பவே சொன்னனான், எங்க கேட்டார் குருவி காதல் மயக்கத்தில் ஏதேதோ உழறினார், எப்ப என்ன நடந்தது கிறுக்கன் ஆகிட்டார், கிறுக்கன் என்றாலும் தெளிவாக இந்த கிறுக்கனுக்கு விளங்கக்கூடியதாக கவி வடித்ததுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்! - அருவி - 07-16-2005 hari Wrote:கிறுக்கன் என்றாலும் தெளிவாக இந்த கிறுக்கனுக்கு விளங்கக்கூடியதாக கவி வடித்ததுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்! மன்னா நீங்களுமா :?: :roll: - வெண்ணிலா - 07-16-2005 Aruvi Wrote:hari Wrote:கிறுக்கன் என்றாலும் தெளிவாக இந்த கிறுக்கனுக்கு விளங்கக்கூடியதாக கவி வடித்ததுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்! அதுதானே எப்போதொடக்கம் கிறுக்கன் ஆகினீர்கள் மன்னா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 07-16-2005 Quote:கிறுக்கன் என்றாலும் தெளிவாக இந்த கிறுக்கனுக்கு விளங்கக்கூடியதாக கவி வடித்ததுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!அண்ணி வந்திட்டா எல்ல இனி கிறுக்கன் தான் என்ன மன்னர்.. :wink: - kuruvikal - 07-16-2005 கிறுக்கனின் கிறுக்கலை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-16-2005 Aruvi Wrote:hari Wrote:கிறுக்கன் என்றாலும் தெளிவாக இந்த கிறுக்கனுக்கு விளங்கக்கூடியதாக கவி வடித்ததுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்! இதில் மன்னர் என்ற குடிமக்கள் என்ன எல்லாம் ஒன்றுதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 07-16-2005 vennila Wrote:பயப்படுகிற அளவுக்கு இல்லை, ஆரப்பக் கட்டத்தில் தான் இருக்கு <!--emo&Aruvi Wrote:hari Wrote:கிறுக்கன் என்றாலும் தெளிவாக இந்த கிறுக்கனுக்கு விளங்கக்கூடியதாக கவி வடித்ததுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள்! --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|