Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் கிறுக்கனாய்...
#1
<img src='http://img311.imageshack.us/img311/6126/brain1mi.jpg' border='0' alt='user posted image'>

<b>வண்ண வண்ண நினைவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாய்
வண்ண மனத் தோட்டத்தில்
வட்டமடிக்க
வஞ்சி மலரவள் வாசம் நாடி
வந்தேன் வலம்..!
வடிவுக்கு அரசியவள்
வஞ்சிக்க வந்தாளோ
வசீகரிக்க வந்தாளோ
வம்புகள் பண்ணியே
வசமாக்கிக் கொண்டாள்
வஞ்சகமில்லா நானும்
வஞ்சிக் கொடியவள்
வலைக்குள்
வலிந்தே சிக்கினேன்
வசந்தம் அது என்று...!

வந்தவள் வஞ்சியல்லோ
வஞ்சிக்க மறப்பாளோ....??!
வண்ணப் படமாய்
வண்ணப் புன்னகை தந்து
வனப்போடு வரவழைத்து
வந்ததும்
வசமாய் மனதோடு பூட்டிவைத்து.....
வசந்தமும் தந்து
வாட்டமும் தருகிறாள்
வகை தொகையாய் வார்த்தைகள்
வருத்தமின்றி உதிர்க்கிறாள்
வரவு வைக்கட்டாம் ஊடலும் கூடலும்
வழக்கப்படுத்தவும் வற்புறுத்திறாள்...!
வர வர
வழக்கங்கள் வழமைகள் மாறுது
வந்தவள் ஆட்சி
வந்திவன் மனதிலோங்க
வர்க்கமாய் இருந்தவன்
வடிவிழந்தே போகின்றான்...!

வந்தது என்ன
வஞ்சிப் பயலிடம்...
வடிவாய் இருந்தவன் - சில கணம்
வதங்குகிறான் வாடுகிறான்
வசனங்கள் உதிர்கின்றான் தனிமையில் - மறு கணம்
வசந்தத்து அவன் மலர் போல்
வதனம் மலர்கிறான்
வழிகிறான் குழைகிறான்
வானம் போல் பொழிகிறான் அன்பு..!
வழமைகள் வாழினும் மாறினும்
வகையாய் இவன்
வழி நடக்கிறான் காதல் கிறுக்கனாய்
வாழும் தன்னவள்
வழுவில்லா நினைவின் துணையோடு...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
காதல் கிறுக்கனாய்... - by kuruvikal - 07-15-2005, 05:58 AM
[No subject] - by shanmuhi - 07-15-2005, 06:19 AM
[No subject] - by அருவி - 07-15-2005, 06:46 AM
[No subject] - by வெண்ணிலா - 07-15-2005, 07:00 AM
[No subject] - by Thala - 07-15-2005, 09:48 AM
[No subject] - by அனிதா - 07-15-2005, 10:01 AM
[No subject] - by tamilini - 07-15-2005, 10:22 AM
[No subject] - by Malalai - 07-15-2005, 11:40 AM
[No subject] - by kuruvikal - 07-15-2005, 12:35 PM
[No subject] - by MUGATHTHAR - 07-15-2005, 01:46 PM
[No subject] - by வினித் - 07-15-2005, 09:27 PM
[No subject] - by kavithan - 07-15-2005, 11:45 PM
[No subject] - by Mathan - 07-16-2005, 02:34 AM
[No subject] - by hari - 07-16-2005, 04:52 AM
[No subject] - by அருவி - 07-16-2005, 05:15 AM
[No subject] - by வெண்ணிலா - 07-16-2005, 06:54 AM
[No subject] - by tamilini - 07-16-2005, 07:29 AM
[No subject] - by kuruvikal - 07-16-2005, 08:49 AM
[No subject] - by Mathan - 07-16-2005, 10:45 AM
[No subject] - by hari - 07-16-2005, 11:34 AM
[No subject] - by tamilini - 07-16-2005, 11:35 AM
[No subject] - by வெண்ணிலா - 07-16-2005, 11:38 AM
[No subject] - by tamilini - 07-16-2005, 12:00 PM
[No subject] - by Mathan - 07-16-2005, 12:12 PM
[No subject] - by Malalai - 07-18-2005, 12:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)