Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள
#1
தென்தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் போராளிகளும் வெளியேறி தமது நிர்வாகப் பகுதிகளுக்கு திரும்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.


2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதிலிருந்து சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அரசியல் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

யுத்த நிறுத்த சரத்துகளின் படி நிராயுதபாணிகளாக அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிங்கள இராணுவம் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி ஒரு நிழல் யுத்தத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தது.

நீடித்த இந்த நிழல் யுத்தம் ஒரு யுத்த சீண்டலுக்கானதே என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் பலமுறை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது விசனத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆயினும் கடந்த மாதம் வெலிக்கந்தையில் 40 போராளிகளின் உயிருக்குக் குறிவைத்து சிங்கள இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களும் பாரிய தாக்குதலை நடத்தின. இதில் ஒரு போராளி படுகாயமடைந்தார்.

இதனால் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ள போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக் கோரி சிறிலங்கா அரசுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் 14 நாள் கெடு விதித்தனர். ஆனால் சிறிலங்கா அரசு இதற்கு உரிய பதிலை அளிக்காத நிலையில் மீண்டும் செல்வநாயகபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது தாக்குதல் நடத்தி இருவரை படுகொலை செய்தனர்.

இந்தச் சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையிலேயே தென் தமிழீழத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து போராளிகளை வெளியேறி தமது நிர்வாகப் பகுதிகளுக்குத் திரும்புமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் இன்று உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

http://www.eelampage.com/?cn=18516
Reply


Messages In This Thread
இராணுவப் பகுதிகளிலிருந்து போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகள - by narathar - 07-13-2005, 11:19 AM
[No subject] - by Mathan - 07-13-2005, 12:38 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 12:56 PM
[No subject] - by Niththila - 07-13-2005, 01:12 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 07-13-2005, 01:24 PM
[No subject] - by Niththila - 07-13-2005, 01:35 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 01:51 PM
[No subject] - by Mathan - 07-13-2005, 01:55 PM
[No subject] - by Niththila - 07-13-2005, 02:04 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 02:12 PM
[No subject] - by வினித் - 07-13-2005, 02:13 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 02:18 PM
[No subject] - by Mathan - 07-13-2005, 02:19 PM
[No subject] - by Niththila - 07-13-2005, 02:21 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 02:30 PM
[No subject] - by வியாசன் - 07-13-2005, 04:12 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 04:40 PM
[No subject] - by வினித் - 07-13-2005, 05:22 PM
[No subject] - by sOliyAn - 07-13-2005, 09:00 PM
[No subject] - by Niththila - 07-13-2005, 10:11 PM
[No subject] - by matharasi - 07-13-2005, 10:43 PM
[No subject] - by Niththila - 07-13-2005, 11:01 PM
[No subject] - by வியாசன் - 07-14-2005, 07:25 AM
[No subject] - by ஊமை - 07-14-2005, 11:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)