Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டான்யா
#1
thatstamil.com
அக்டோபர் 07, 2003

விடுதலைப் புலிகள் ஆந்திர நக்சலைட்டுகள் இடையே தொடர்பு: அத்வானி

டெல்லி:

ஆந்திர நக்சலைட்டுகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக துணைப் பிரதமர் அத்வானி கூறினார்.


டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல முயற்சித்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளின் வகை மற்றும் அதன் தொழில்நுட்பத்தைப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தான் மக்கள் யுத்தப் படை நக்சலைட்டுகள் இந்தத் தொழில்நுட்பத்தை கற்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

ஆனால், நாயுடுவைக் கொல்ல புலிகள் திட்டம் தீட்டியதாக எல்லாம் சொல்ல முடியாது என்றார்.

மேலும், நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க, ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட நக்சல்கள் செயல்பாடு நிறைந்த 7 மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டப் போவதாகவும் அத்வானி தெரிவித்தார்.

இந்த மாநில அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கமிட்டி 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி விரைவில் கூடி நக்சல்களை ஒழிக்க திட்டம் வகுக்கும். மேலும் 7 மாநில போலீசாரும் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்
Reply


Messages In This Thread
கிளம்பிட்டாய்யா கிளம - by Sangili - 10-07-2003, 03:17 PM
[No subject] - by kuruvikal - 10-07-2003, 06:08 PM
[No subject] - by yarl - 10-07-2003, 08:43 PM
[No subject] - by Kanani - 10-08-2003, 08:23 AM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 12:51 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 12:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)