![]() |
|
கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டான்யா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டான்யா (/showthread.php?tid=8023) |
கிளம்பிட்டாய்யா கிளம - Sangili - 10-07-2003 thatstamil.com அக்டோபர் 07, 2003 விடுதலைப் புலிகள் ஆந்திர நக்சலைட்டுகள் இடையே தொடர்பு: அத்வானி டெல்லி: ஆந்திர நக்சலைட்டுகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக துணைப் பிரதமர் அத்வானி கூறினார். டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல முயற்சித்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளின் வகை மற்றும் அதன் தொழில்நுட்பத்தைப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது. விடுதலைப் புலிகளிடம் இருந்து தான் மக்கள் யுத்தப் படை நக்சலைட்டுகள் இந்தத் தொழில்நுட்பத்தை கற்றிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. ஆனால், நாயுடுவைக் கொல்ல புலிகள் திட்டம் தீட்டியதாக எல்லாம் சொல்ல முடியாது என்றார். மேலும், நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க, ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட நக்சல்கள் செயல்பாடு நிறைந்த 7 மாநிலங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டப் போவதாகவும் அத்வானி தெரிவித்தார். இந்த மாநில அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கமிட்டி 5 ஆண்டுகளுக்கு முன் மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி விரைவில் கூடி நக்சல்களை ஒழிக்க திட்டம் வகுக்கும். மேலும் 7 மாநில போலீசாரும் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும் என்றார் - kuruvikal - 10-07-2003 உவர் அத்வானியார் நல்ல காவி.... போக்காத கள்ளச்சாமி...முந்தி யாழ்ப்பாணத்தில வடக்கில கிழக்கில ஆமிக்காரன் கோவில்களுக்கு குண்டு போடுறான் என்று இலங்கை இந்துக்கள் முறையிட கம்மெண்டு இருந்தவர்....ஆனா இந்தியாவில தான் தான் ஏதோ இந்துமதக் காவல் கடவுள் போல...இப்ப பிராமனியத்தை கையில பிட்டிச்சுக் கொண்டு திரியுறார்...புலியள் பிராமனிய.... இந்துதுவாக்கு எதிர் எண்டதாலதான் ஐயாவுக்கு புலியள் மேல ஒரு கறள்...அதுதான் அடிக்கடி புலிக்கு லிங் போடுறவர்...உதெல்லாம் சும்மா இருக்கிற புலியை தீண்டிப்போட்டு.... இருக்க ஏலாமல் கையைச் சுட்டுகிறதிற்கான அறிகுறியோ என்னவோ...என்டாலும் சூடு கண்டதிலைதான் அறிக்கையில மிச்சம் நிதானமாக வந்திருக்குப்போல...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- yarl - 10-07-2003 ஒருத்தரு பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க புலிகளை கூப்பிடவே;ணமென்கிறார் .மற்றவர் நக்சலைட்டுக்கு புலிகள் பயிற்சியளித்துள்ளனர் என்கிறார் பேசாமல்;.நக்சலைட்டுகளைக்கொண்டே பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கலாமே... - Kanani - 10-08-2003 வீரப்பனுக்கு சந்தன மரம் வெட்டச் சொல்லிக்கொடுத்ததும் (அதுதான் கோடாரி பிடிக்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ) புலிகள் என்று அறிக்கை விடுவார்கள்...காதிலை பூ வைத்திருப்பவனுக்கு
- vaiyapuri - 10-08-2003 அரசியல்ல உதெல்லாம் சகஜமப்பா ! - vaiyapuri - 10-08-2003 அவயவைக்கு தேவைப்படையிக்க புலியைப் பாவிப்பினம் தேவை முடிஞ்சா பலிப்பினம்.உதுகளுக்கு வெளிநாடுகள்ல உதாரணம் தேவையில்லை பாருங்கோ..உள்ளுக்கையிருந்து வெளிநாட்டு அரசியல் வாதிகள் கற்ற பாடங்கள் தான் இவை. உதுகள இந்தக் காதால கேட்டு மற்ற காதால வெளிய விட்டுறனும். |