07-12-2005, 09:48 AM
<b>வேதனைகள் வாழ்க்கைக்கு வைரமூட்டும்</b>
வாழ்ந்து பார் வாலிபனே வானம் உனக்காய் விரிந்து கிடக்கிறது
வளர்ந்துவா தேய்பிறையே வெளிச்சங்காட்ட இருள் இருக்கிறது
வாணவில்லின் விம்பங்கூட உண்மையில்லை
பின்னால் வரும் நிழல் கூடச் சொந்தமில்லை
சோர்ந்து போகாதே சொற்கம் உந்தன் கையில்
அலைகள் அடித்து கரைகள் இன்னும் அழியவில்லை
புூகம்பத்தால் புூமி இன்னும் ஒழிந்து விடவில்லை
மரணத்துடன் போட்டியிட்டு மண்ணுயிர் பிறந்து கொண்டே இருக்கிறது
மாலையை வென்ற காலையை மறுதரம் அது மண்டியிட வைக்கிறதே!
கண்ணீருக்கு உன் காலத்தைக் காணிக்கையாக்காதே
அதைத்துடைக்க இருகையில் உனக்கு ஒருகை போதாதோ?
எனக்குத் தெரியும்! உன் உடலில் தைக்கப்பட்ட
முட்களின் வலி உன்னைச் சிதைக்கிறது என்று
வலிகள் இல்லாத வாழ்க்கையில் ருசிகள் தெரிவதில்லை
தொலைவில் இருந்த இன்பத்தை துன்பம் துலக்கிக்காட்டுகிறது
தோளில் உள்ள வடுக்களே உனக்கு படிக்கல் ஆகட்டும்
அதைப்பார்த்து உந்தன் பாதங்கள் பலம் பெறட்டும்
தங்க நகை அங்கத்தில் மின்ன தணலில் வேகவில்லையா
தாங்கிச்செல்லும் ஆயுதங்கள் அடிவாங்குமுன்பு வெறும் இரும்புதானே
ஆயிரம் தோல்விகள் தோமஸ்அல்வாஎடிசனை தேறவைக்கவில்லையா
தேம்பித்தேம்பி அழுத உன் தேகத்திற்கு தேனுற்றுகிறேன்
திடமாய்ப்பார் தடங்கள் தாழ்திறந்து உன்னை வரவேற்கிறது
தீதாய் நினைத்தோர் தோழ்போட இடம்பார்ப்பது உனக்குப் புரியும்
கண்மூடித்திறந்துபார் காலங்கள் எவ்வளவு விரைவாய் கரைந்தோடி விடும்
பிறப்பின் படிகளில் பாதம்வைக்கும் முன்னே இறப்பின் கதவுகள்திறக்கிறது
நாளையைச் சிந்திக்கும் போதே அது நேற்றாகி ஏளனஞ்செய்கிறது
மாடியில் இருந்து விழுந்தவன் மஞ்சத்தில் படுத்துத் து}ங்குகிறான்
கால்தடக்கி விழுந்தவன் கல்லறையில் காணாமல் போகிறான்
கையில் சிக்காத காலத்துக்குள் ஏன்கவலையைச்சிக்கவைக்கிறாய்
கால்கள் வலிக்கும் வரை கற்களையும் முட்களையும் தாண்டு
கைகள் கடுக்கும் வரை காரியங்களைச் செய்யத்து}ண்டு
வாய்கள் வலிக்கும் வரை வார்த்தைகளைப் பேசு
கண்கள் கூசும் வரை காட்சிகளைப்பார்
இதயம் வலிக்கும்வரை வேதனைகளை அனுபவி
சிந்தை கலங்கும் வரை சிந்தைக்குத் தடைபோடாதே
செவிகள் மந்தமாகும் வரை அதற்கு தாழ்போடதே
இதயத்துடிப்பு ஓயம்வரை இளமைத்துடிப்பு நினைவில் வேண்டும்
தழும்புகளைப் பார்த்துப் பார்த்தே இதயம் இரும்பாகவேண்டும்
தேவைக்கேற்ப அவ்வப்போது தடங்களைத் தட்டிப்பார்க்க வேண்டும்
துணைக்த் தோதாய் தோழனைக்கூடத் தேடாதே
தொலைந்து போன வாழ்க்கைக்குத் து}தனுப்பாதே
கலைந்து போன விம்பத்தைக் கணக்கெடுக்காதே
அது போதும் காலத்திற்குள் நீவாழ. . . . !!
இன்னும் திடம் உன் உடலில் தெரியவில்லை யென்றால்
அது சடலமாகி வெகுநேரமாகிவிட்டது விரைவில் அடக்கம் செய்துவிடு.
¿ýÈ¢ À¦Ä÷§Á¡..