07-10-2005, 02:57 PM
<b>வரதட்சணை கொடுக்காததால் மணமேடையில், திருமணத்தை நிறுத்திய மணமகன்: மணமகள் கண்ணீர் </b>
திருவண்ணாமலை மாவட் டம் போளூர் அருகே உள்ள நரிக் குன்று கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்குழந்தை (வயது 50). இவரது மகன் மாதவன் (வயது 27). பெங்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அதே தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் வயலட் ராணி (25). பெங்களூர் காடு கொண்டன ஹள்ளியில் உள்ள தன்னலக்காடு பகுதியை சேர்ந்தவர்.
ஒரே இடத்தில் பணி புரிந்ததால் மாதவனுக்கும் வயலட்ராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடை வில் இது காதலாக மாறியது. இருவரும் கடந்த 4 வருடங் களாக காதலித்து வந்தனர்.
இதுபற்றி அறிந்த வயலட் ராணியின் பெற்றோர் மகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவருக்கு மாதவனையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மாதவனின் பெற்றோருடன் பேசி திருமணம் நிச்சயித்தனர்.
கடந்த மாதம் 17-ந் தேதி நரிக்குன்று கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் மாதவன்-வயலட்ராணி திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வயலட்ராணி தனது பெற்றோர் மற்றும் உறவினர் களுடன் முதல் நாளே நரிக்குன்று கிராமத்துக்கு வந்தார்.
மறுநாள் காலையில் மணப்பெண் அலங்காரத்தில் ஆயிரம் கனவுகளுடன் அவர் மாதவனை கைப்பிடிக்க மணமேடையில் காத்திருந்தார்.
முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மாப்பிள்ளை மாதவன் கோபத்துடன் மணமேடைக்கு வந்து தனக்கு 15 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக இப்போதே கொடுத்தால் தான் வயலட்ராணியின் கழுத்தில் தாலி கட்டுவேன். இல்லா விட்டால் இந்த திருமணம் நடக்காது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் மணமகள் வயலட் ராணி உள்பட திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கல்யாணம் நடக்காததால் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
தனது திருமணம் பாதியில் நின்றதால் வேதனை அடைந்த வயலட்ராணி இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாதவன், அவரது தந்தை சின்னக்குழந்தை, தாய் புஷ்பா மற்றும் சகோதரர் முத்து ஆகிய 4 பேர் மீதும் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னக் குழந்தை, புஷ்பாவை கைது செய்தனர். மாதவன், முத்துவை தேடிவருகின்றனர்.

----------