Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலை மாவட்ட கடற்புலிகளின் தளபதி வீரச்சாவு
#14
<b>போராளிகளின் வித்துடல் விதைக்கப்படும் வரை திருமலையில் பூரண கதவடைப்புப் போராட்டம்!</b>

திருகோணமலையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்படும் வரை திருகோணமலை தலைநகரில் பூரண கதவடைப்புப் போராட்டம் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.


திருகோணமலை மாவட்ட தமிழ்மக்கள் பேரவை இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை செல்வநாயகபுரம் அரசியல் பணிமனை இனந்தெரியாத நயவஞ்சகக் கும்பலின் தாக்குதலுக்குட்பட்டு போராளிகள் கொல்லப்பட்டும், போராளிகள் காயமடைந்தும் உள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிராயுதபாணிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது திட்டமிட்ட அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு படையின் பூரண அனுசரணையுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை முற்றிலும் சமாதானத்திற்கெதிரான சக்திகளாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சமாதானத்தை நிச்சயமாக இல்லாது ஒழிக்கும்.

எனவே இந்த மோசமான சதிகார நடவடிக்கையை கண்டித்து நாளை முதல் போராளிகளின் வித்துடல்கள் விதைக்கப்படும் வரை பூரண கதவடைப்பின் மூலம் எம் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிப்போம்.

எமது தாயகத் தலைநகரில் இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடராது இருக்க வேண்டுமெனில் ஒன்றுபட்ட மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை மூலமே இவற்றுக்கு முடிவுகட்ட முடியும்.

எமது நகரம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த செயலுக்கு சிறிலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். யுத்த சூழ்நிலையை விட சமாதான சூழ்நிலையே எமக்கு மிகப் பெரிய ஆபத்தை தந்து கொண்டிருக்கிறது.

எனவே பாடசாலைகள், அரச நிறுவனங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், போக்குவரத்துக்கள், யாவும் பூரணமாக நிறுத்தப்பட்டு அமைதியாக எவ்வித வன்முறைகளுக்கும் இடம்கொடாது தொடர்ந்து எம்தீர்ப்பை அகிம்சை வழியில் தெரிவிப்போம்.

இவ்வாறு திருகோணமலை தமிழ்மக்கள பேரவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 07-10-2005, 06:59 AM
[No subject] - by Nitharsan - 07-10-2005, 08:12 AM
[No subject] - by adsharan - 07-10-2005, 08:33 AM
[No subject] - by kuruvikal - 07-10-2005, 08:42 AM
[No subject] - by Thala - 07-10-2005, 09:15 AM
[No subject] - by hari - 07-10-2005, 12:04 PM
[No subject] - by அனிதா - 07-10-2005, 12:35 PM
[No subject] - by Vishnu - 07-10-2005, 12:46 PM
[No subject] - by Vaanampaadi - 07-10-2005, 01:10 PM
[No subject] - by eelapirean - 07-10-2005, 01:31 PM
[No subject] - by வியாசன் - 07-10-2005, 01:45 PM
[No subject] - by hari - 07-10-2005, 01:46 PM
[No subject] - by hari - 07-10-2005, 01:54 PM
[No subject] - by selvanNL - 07-10-2005, 02:54 PM
[No subject] - by hari - 07-10-2005, 02:57 PM
[No subject] - by AJeevan - 07-10-2005, 05:32 PM
[No subject] - by MUGATHTHAR - 07-10-2005, 06:30 PM
[No subject] - by narathar - 07-10-2005, 08:15 PM
[No subject] - by வினித் - 07-10-2005, 08:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)