07-10-2005, 05:53 AM
kakaivanniyan Wrote:ஓமோம் நீங்கள் எல்லாரும் நல்லாத்தான் கருத்து சொல்லுறியள். சீதனம் ஒருதரும் வாங்காமல் விட்டால் கொஞ்ச நாளையாலை இன்னொரு விவாதம் செய்யவேண்டி வரும்.
யாழ்ப்பாணத்திலை இருந்து ஒரு இளைஞன் தினக்குரலுக்கு எழுதுவான் .சிறியவேலை செய்கின்ற எங்களை பெண்கள் திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்கள் .இல்லை தயவு செய்து எங்களையும் திருமணம் செய்யுங்கள் என்று. பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் இருக்கும்வரையும் சீதனம் வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்த்தல் என்பன இருக்கத்தான் செய்யும்.. இங்கு விவாதிப்பவர்கள் செல்லுங்கள் எந்தப்பெண்ணாவது ஒரு குறைந்த வேலை செய்பவனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா?
அல்லது பெண்ணின் பெற்றோர்கள்தான் சம்மதிப்பார்களா?
வெளிநாடுகளில் வசிக்கின்ற எங்களையும் ஒரு வைத்தியரையும் காட்டி யாரை திருமணம் செய்கின்றீர்கள் என்று கேட்டால் 100 வீதம் வைத்தியர்தான் தெரிவு செய்யப்படுவார். எங்கள் சமூக அமைப்பு மாறும் வரையும் சீதனம் இருக்கட்டும். எங்களவர்களின் மனதிலுள்ள ஏற்றத்தாழ்வுகள்(வேலைகளில்)முதலில் மாறட்டும் அதன் பிறகு சீதனம் இல்லாமல் போகட்டும்.
என்ன காக்கை இதற்க்கும் சீதனத்துக்கும் என்ன சம்பந்தம்? அப்படியாயில் சிறிய வேலை செய்பவன் சீதனம் வேண்டி பெரிய வேலை தேடச் சொல்கின்றீர்களா? ஒரு குடும்பத்தை கொண்டு நடாத்த கூடியளவுக்கு உழைப்பவனை எந்த பெண்ணும் நிராகரிக்க மாட்டாள்... யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலரின் கவலை தாம் எவ்வளவு படித்தும் எந்த பெண்ணும் தம்மை ஏற்ப்பதில்லை ஆனால் வெளி நாடு என்றவுடன் தலையாட்டுகிறாள் என்று? இதற்க்கு என்ன காரணம்? நீங்கள் நாங்கள் காட்டும் எடுவை அதை வெளிநாட்டில் இருப்பவர்கள் முதலில் நிறுத்துங்கள்... சமையல் வேலை செய்யும் ஒருவன் தன்னை திருமணம் செய்ய வருபவளிடம் நான் அந்த உணவகத்தின் மேற்பார்வையாளன் எனக்கு கீழ் தான் எல்லாம் என்றால்... போச்சு அந்த பெண்னும் உண்மை அது என்று நினைத்து வெளி நாடு வந்தவுடன் அவன் பட்ட கடனை தானும் சேர்ந்து கட்ட வேண்டிய நிலை இருக்கிறது.... பெண்கள் பதவியையோ பட்டத்தையோ பார்த்து திருமணம் செய்யவும் இல்லை மாப்பிள்ளை தேடவும் இல்லை ஆனால் ஆண்கள் என்ன செய்கிறார்கள்? புகலிடத்தில் சிதனம் என்ற பதம் குறைவு என்று கதைக்கிறீர்கள் அதற்க்கு காரணம் என்ன என்று கேட்டால்... சீதனம் வேண்டினால் பெண் வீட்டில் இருந்து பல அழுத்தங்கள் வருமாம்.... அதனால் வேண்டுவதில்லையாம்.... அத்தோடு இங்கு பெண்கள் திருமணம் ஆகுமுன் உழைக்கும் பணம் அவர்களது கணக்கில் வைப்பகங்களில் இருப்பதால் திருமணம் ஆனா பின் அந்த பணமும் தமக்குரியது என்கிறார்கள் இதனிலும் பார்க்க இவர்கள் சீதனத்தை வேண்டியிருக்கலாம்....
என்னைப் பொறுத்தவரை சீதனம் வேண்டுபவனும்...
தன்னை பணத்திற்காக விற்பவனும் ஒன்று.......
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

