07-08-2005, 10:18 PM
Quote:இன்று தமக்கு நன்கு பிடித்துக்கொண்ட ஒருவருடன், வயதை கருத்திலெடுக்காது வாழ, பல ஆண்களும், பெண்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சமுதாய எதிர்பார்ப்புகள், கட்டுப்பாடுகள், எள்ளிநகையாடல்கள் போன்றவற்றை காரணமாக கொண்டு பலரும் செயற்பட வகையின்றி ~~இனியென்ன இப்படியே இருந்துவிட்டு போவோம்~~ என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
ஆம் தற்கால தமிழ் இளைஞர்கள் சீதனம் சாதி மத பேதங்களுக்கு அப்பால் தமக்குப் பிடித்த துணையுடன் வாழத் தயாராக இருக்கிறார்கள் ஆனால் 19 ம் நூற்றாண்டு சிந்தனையுடன் இருக்கும் சிலரே இதை எதிர்க்கிறார்கள்
<b>சமுதாய எதிர்பார்ப்புகள் எள்ளிநகையாடல்களை கருத்திற்கொண்டால் ஆராக்கியமான மாற்றங்களை கொண்டு வருவது கடினம் </b>
புதிய மாற்றங்களை சமுதாயம் (என நாங்கள் கற்பனையில் உருவகித்திருக்கும் சிலர்) எள்ளிநகையாடும் ஏனெனில் இவர்கள் சாதி மத வேறுபாட்டினால் நன்மையடைபவர்கள்.
தற்கால தமிழ்த்தேசம் திருமண விடயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினை முதிர்கன்னிகளின் பிரச்சினை தாயகத்தில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் திருமணம் செய்கிறார்கள் 1.5 வீதமானவர்களே விவாகரத்துப் பெறுகிறார்கள்
இப்பிரச்சினை இல்லாத, எமது சூழல் காரணிகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழலையும் பிரச்சினைகளையும் கொண்ட மேற்குலகம் செய்த ஆய்வு எமக்கு பொருந்தாது என்பதற்கு எம்மவர்கள் விடும் தவறுகளையும் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி அந்த ஆய்வை ஏற்றுககொள்ள வேண்டும் என்பது ஏற்கமுடியாதது
தற்பொழுது தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் பிரச்சினையைப் பற்றி ஆராய்வதை விடுத்து எங்கள் கலவித்திட்டத்தில் என்ன குறைபாடு, பிச்சைக்காரர்கள் பற்றியோ அல்லது மோட்டார் வண்டி பற்றி ஆராய்வது பொருத்தமானது அல்ல
பொருளாதாரத்தடை யுத்தம் போன்ற பல காரணிகளுக்கு மத்தியில் தமிழத்தேசம் அடைந்து வரும் வளர்ச்சியை வெறுமனே யாழ் குடாநாட்டை மட்டும் கருத்திற்கொண்டு விமர்சிப்பது நகைப்பிற்குரிய விடயம்
யாழ்குடா முழுமையாக தமிழ்த்தேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை அங்கு வெளிநாட்டு புலனாய்வாளர்களும் இலங்கை அரசின் தீய சக்திகளுமே மக்களை தீய வழியில் இட்டுச் செல்கிறார்கள்.
குளோனிங் பற்றி அறியாமையில்தான் எழுதப்பட்டது என நினைத்தேன், ஆனால் அது விதண்டாவதத்திற்காகத்தான் எழுதப்பட்டது என்று இப்பொழுது புரிகிறது. குளோனிங்கும் தமிழ்த்தேசமும் பற்றிய கருத்துக்களை பொருத்தமான இடத்தில் தருகிறேன்
பரிசோதனைக் குழாய் குழந்தையை வசதி படைத்த இயற்கையாக குழந்தை பெற முடியாத தம்பதிகள் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் இதையே தமிழத்தேசத்திற்கு ஒரு தீர்வு என்பது எவ்வகையில் பொருந்தும்
தமிழ்த்தேசத்தில் குறைபாடுகள் இல்லை என்று கூறவில்லை தமிழ்த்தேச மக்களால் எவ்வாறு இப்பிரச்சினையை கையாளமுடியும், அவர்களின் இயலுமைக்குட்பட்டு எவ்வாறு தீர்க்கமுடியும் என்பதே ஆராயப்படவேண்டிய விடயம் :!:
சகோதரி அஸ்வினி நீங்கள் உங்கள் கருத்தில் தெளிவாக இருப்பதும் உங்கள் கருத்தை நிலையாக முன்வைப்பதில் தெளிவாகவும் இருக்கும் பட்சத்தில் இவ்வாறு கோபத்துடன் கருத்து எழுதவேண்டிய அவசியம் இல்லையே
இனிமேல் பொருத்தமற்ற கருத்துகளுக்கும் அர்த்தமற்ற விதண்டதவாதத்திற்கும் பதிலளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் நானும் தவிர்த்துக்கொள்கிறேன்

