07-08-2005, 06:19 PM
இயற்கையில் ஆண்கள் இளமையான இனப்பெருக்கம் செய்யத்தக்க பெண்ணை நாடுமாறும் பெண்ணோ தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு தரத்தக்க ஆணை நாடுமாறும் அமைக்கப்பட்டுள்ளார்கள். எப்படி பிள்ளை பெறுவது பெண் என்பது இயற்கையாக அமைந்துள்ளதோ, அவ்வாறே அதற்கு அமைவாக ஆண்-பெண் உயிரியலும் உளவியலும் இவ்வாறாக இயற்கையாக அமைந்துள்ளது.
அதே வேளை இன்றைய உலகில் பிள்ளைபெறுவதை பலரும் வாழ்வின் முக்கிய தேவையாக கொள்வதில்லை. ஆகவே இந்த இயற்கையின் போக்கு எல்லோருக்கும் தேவையற்றதும், எல்லோரும் விரும்பி பின்பற்றாத ஒன்றும் ஆகியுள்ளது. இன்று தமக்கு நன்கு பிடித்துக்கொண்ட ஒருவருடன், வயதை கருத்திலெடுக்காது வாழ, பல ஆண்களும், பெண்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சமுதாய எதிர்பார்ப்புகள், கட்டுப்பாடுகள், எள்ளிநகையாடல்கள் போன்றவற்றை காரணமாக கொண்டு பலரும் செயற்பட வகையின்றி ~~இனியென்ன இப்படியே இருந்துவிட்டு போவோம்~~ என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
ஆகவே மக்கள் மத்தியில் இனப்பெருக்கத்தை மையமாக கொண்ட குடும்ப வாழ்வு பண்பாட்டை அகற்றி, வாழ்க்கைத்துணை குடும்பவாழ்வு பண்பாட்டை ஊக்கப்படுத்த எழுத்தாளர்கள், பாடசாலைகள், கல்விமான்கள், தமிழீழ அரசு ஆகியவை முன்வர வேண்டும். இனப்பெருக்கத்தை மையமாக கொண்ட குடும்பவாழ்வில் இளைய, குழந்தை பெற்று பராமரிக்க தக்க, பெண்ணுக்கு இருக்கும் தேவை அதிகரித்துக் கொண்டே போகும். வாழ்க்கைத்துணையை மையமாக கொண்ட குடும்ப வாழ்வில், வயதும் இளமையும் கருதப்பட வேண்டிய காரணிகள் அல்ல. மாறாக ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு து}ரம் நண்பர்கள் என்பதே அங்கு கருதப்படும் காரணி. இவ்வாறாக நட்பை அடிப்படையாக கொண்ட திருமணங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தப்பட்டு அவற்றிற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

Quote:தற்பொழுது தமிழர் தேசத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம், அதிலும் திருமணமுடிக்காதிருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையே அதிகம்.