07-08-2005, 01:10 PM
ஈழத்துளி Wrote:Quote:ஆண்கள் வயது கூடிய பெண்களைத் திருமணம் செய்ய முடியாதென்றல்ல...செய்யலாம்... அங்கு இரண்டு விடயங்கள் பிரதானமானவை...ஒன்று பெண்களின் இனப்பெருக்க தகுதிக்காலம் ஆண்களைவிடக் குறைவு என்பதும் அடுத்தது குடும்பப்பராமரிப்பில் தனிநபர் பராமரிப்பில் இயல்பாகவே பெண்ணின் பங்களிப்பு அதிகம் என்பதும்...கருத்தில் கொள்ளப்பட வேண்டும்...!
நாங்கள் இருப்பது 21 ம் நூற்றாண்டில் 18 19 ஆம் நூற்றாண்டில் அல்ல 10 பிள்ளைகள் பெறுவதற்கு
ஆகவே இனப்பெருக்க தகுதிக்காலம் பெரிதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
குடும்ப பராமரிப்பில் பெண்ணிண் பங்களிப்பு அதிகம் என்று சொல்வதற்கும் இது 18 ம் நூற்றாண்டு ஆணாதிக்க சமுதாயம் அல்ல குடும்ப பராமரிப்பில் ஆண்களும் ஈடுபடும் 21 ம் நூற்றாண்டு ஆனால் எம்மவரில் பலர் இன்னும் 18 19 ம் நூற்றாண்டுபோல் வாழ்வதும் வாழ நினைப்பதும் வேதனைக்குரிய விடயம்
இன்று பிள்ளைகள் பெற்றோரை வைத்து பராமரிப்பதும் குறைவு இந்நிலையில் ஒருவருக்கொருவர் துணையாக இறுதிவரை வாழ பெண் ஆணைவிட வயது கூடியதாக அமைவது பொருத்தமானது அல்லவா?
ஆனால் இது நடக்குமா?
அத்தோடு இத்தலைப்பை ஆரம்பிக்க ஏதுவாக இருந்த தாயப் பெண்ணிண் உள்ளக்குமுறல்களை புலம்பெயர் பெண்களும் ஆண்களும் கருத்திலெடுப்பார்களா? சமுதாய நலனில் அக்கறை இருந்தால் கருத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
ஆனால் மனிதன் சுயநலமுள்ள விலங்கு
ஈழத்துளி அவர்களே...இது 21 நூற்றாண்டு என்று சொல்லிக் கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை...சமூகச் சீர்திருத்தம் நோக்கி 19 நூற்றாண்டுப் போராடத் தொடங்கி இன்னும் போராடி முடிக்காத சமூதாயத்தைப் பிரலிபலிப்பவர்கள் நாங்கள்..! உலகம் 19, 20 இல் அனுபவித்ததை 21 இல அசை போட்டுப் பார்க்கும் நேரமிது...மேற்குறிப்பிட்ட இரண்டு ஆய்வுமுடிவுகளும் 19ம் 20ம் நூற்றாண்டின் விளைவுகளை மதிப்பிடும் ஆய்வுகள்...அவை 21 இற்கான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லச் செய்யப்பட்ட ஆய்வுகள்...அது பிற்போக்கான ஆய்வுகள் அல்ல...உங்களை அனைவரையும் விட எப்பவோ நாகரிகத்தையும் சமூக சமத்துவத்தையும் அடைந்துவிட்ட தேசங்களின் வெளிப்பாடுகள் அவை...அதையும் கொஞ்சம் கவனித்தல் நல்லது...! சிலவேளை 19,20 நூற்றாண்டின் மாற்றங்கள் மீண்டும் 18 க்குப் போகத் தூண்டுதோ தெரியவில்லை...அப்படித்தான் ஆய்வுகள் முடிக்கின்றன...!
அப்படி நீங்கள் உறுதியாக 21 நூற்றாண்டில் வாழ வேண்டும் என்று நினைத்தால் திருமணம் அவசியமில்லை... வாடகைக்கு அமர்த்தி ஒரு குழந்தையைக் குளோனிங் மூலம் பெற்றுக் கொண்டு...வாழலாம்...அதற்கும் தடையில்லை...சீதனமும் தேவையில்லை...அதுவும் சாத்தியமே....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

