07-08-2005, 11:49 AM
Quote:ஆண்கள் வயது கூடிய பெண்களைத் திருமணம் செய்ய முடியாதென்றல்ல...செய்யலாம்... அங்கு இரண்டு விடயங்கள் பிரதானமானவை...ஒன்று பெண்களின் இனப்பெருக்க தகுதிக்காலம் ஆண்களைவிடக் குறைவு என்பதும் அடுத்தது குடும்பப்பராமரிப்பில் தனிநபர் பராமரிப்பில் இயல்பாகவே பெண்ணின் பங்களிப்பு அதிகம் என்பதும்...கருத்தில் கொள்ளப்பட வேண்டும்...!
நாங்கள் இருப்பது 21 ம் நூற்றாண்டில் 18 19 ஆம் நூற்றாண்டில் அல்ல 10 பிள்ளைகள் பெறுவதற்கு
ஆகவே இனப்பெருக்க தகுதிக்காலம் பெரிதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை
குடும்ப பராமரிப்பில் பெண்ணிண் பங்களிப்பு அதிகம் என்று சொல்வதற்கும் இது 18 ம் நூற்றாண்டு ஆணாதிக்க சமுதாயம் அல்ல குடும்ப பராமரிப்பில் ஆண்களும் ஈடுபடும் 21 ம் நூற்றாண்டு ஆனால் எம்மவரில் பலர் இன்னும் 18 19 ம் நூற்றாண்டுபோல் வாழ்வதும் வாழ நினைப்பதும் வேதனைக்குரிய விடயம்
இன்று பிள்ளைகள் பெற்றோரை வைத்து பராமரிப்பதும் குறைவு இந்நிலையில் ஒருவருக்கொருவர் துணையாக இறுதிவரை வாழ பெண் ஆணைவிட வயது கூடியதாக அமைவது பொருத்தமானது அல்லவா?
ஆனால் இது நடக்குமா?
அத்தோடு இத்தலைப்பை ஆரம்பிக்க ஏதுவாக இருந்த தாயப் பெண்ணிண் உள்ளக்குமுறல்களை புலம்பெயர் பெண்களும் ஆண்களும் கருத்திலெடுப்பார்களா? சமுதாய நலனில் அக்கறை இருந்தால் கருத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
ஆனால் மனிதன் சுயநலமுள்ள விலங்கு

