07-08-2005, 11:34 AM
ஈழத்துளி Wrote:இதில கவனத்தில் எடுக்கவேண்டிய இன்னொரு விடயம் ஒருவர் வாழும் காலம்
இலங்கையில் சராசரியாக ஒரு பெண் 76 வயது வரைக்கும், ஒரு ஆண் 70 வயது வரைக்கும் வாழ்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன
நீங்கள் கூறியதுபோல் 10 வயது அதிகமுள்ள ஆணைத் திருமணம் செய்யும் பெண் 60 வயது முதல் 76 வயது வரை துணையின்றி விதவையாக வாழவேண்டும்
சமுகநலனில் அக்கறையிருப்பின் விதவைகள் உருவாவதை தடுக்க விருப்பமிருப்பின் திருமணத்தின்போது ஆணைவிட பெண் 6 வயது கூடியவளாக இருக்க வேண்டும்
இது நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?
இதை நீங்கள் யாரும் ஆதரிப்பீர்களா?
இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம்...சம வயதை அடையும் இரண்டு முதியவர்களைப் பராமரிக்க ஆகும் செலவீனத்தோடு ஒப்பிடும் போது..குடும்பத்தில் துணைகள் தம்மைத் தாமே பராமரிக்கும் நிலையில் இயன்றவரை இருப்பது வரவேற்கப்படுகிறது...! பெண்ணோ ஆணோ ஒருவர் ஒப்பீட்டளவில் இளமையாக இருப்பின்...அவர் விதவையாகினும் தன்னைத் தானே குறிப்பிட்ட காலத்துக்கு பராமரிக்கும் தகுதியோடு இருப்பார்...! உங்கள் கணக்குப்படி 4 வயசு வித்தியாசம் என்றாலும் கூட பெண்...10 வருடங்கள் தனியத்தான் வாழ வேண்டும்...அதுவும் இயலாமைக் காலத்தில் இழப்புக்களை சந்தித்து...அதே நேரம் அவருக்கு ஒரு 60 வயதென்றால்...அவர் தன்னை இழப்பிலிருந்தும் சுதாகரித்து சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து வாழ முடியும்..! எது சிறந்தது...!
ஆண்கள் வயது கூடிய பெண்களைத் திருமணம் செய்ய முடியாதென்றல்ல...செய்யலாம்... அங்கு இரண்டு விடயங்கள் பிரதானமானவை...ஒன்று பெண்களின் இனப்பெருக்க தகுதிக்காலம் ஆண்களைவிடக் குறைவு என்பதும் அடுத்தது குடும்பப்பராமரிப்பில் தனிநபர் பராமரிப்பில் இயல்பாகவே பெண்ணின் பங்களிப்பு அதிகம் என்பதும்...கருத்தில் கொள்ளப்பட வேண்டும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

