Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈர உணர்வுகள் ... :!:
#1
நிலத்திலிருந்து
ஆவியாகி
மேகம் தொட்டதும்
மழையாகி

நிலம் தொட
வந்து செல்லும்
மழையே மழையே..!

நீ நிலம் தொட்டுப் - பின்
உள் உறைந்து
செழிப்பில் - ஒரு
கதை சொல்லி

தோன்றித் தோன்றி
மறைகிறாய்
நெடு நாட்களில்
தோன்றாமலும்
விடுகிறாய்..

ஐயகோ.

நீ தோன்றும் நாள் பார்த்து
வரட்சியும்
நீ மறையும் நாள் பார்த்து
விதை நிலமும்
உணர்வுகளைக் கொட்டுகின்றன..

நாங்களும் தான்,

நிலமிழந்தோம்
நிஜமிழந்தோம்
நினைவிழந்தோம்
நிர்க்கதியானோம்

கண்டதெல்லாம் மறந்து போச்சு..
அந்தக் கோர நினைவுகளைத் தவிர !
கொண்டதெல்லாம் இழந்துமாச்சு..
அந்தக் கனவின் உணர்வினைத் தவிர !

உணர்வுகளுக்குள் ஒரு ஈரம்
இன்னமும்
உருக்குலையாமல் தொக்கு நிற்குது

உயிர்களுக்குள் ஒரு மாற்றம்
அது இன்னமும்
உருவெடுக்காமல் தோற்று நிற்குது

ஏனென்றும் தெரியவில்லை
எதுவென்றும் புரியவில்லை
இனிமேலும் பொறுமையில்லை..

என் மூச்சது முடிந்திடுமோ ?
தாகம் தீர முன்
உயிரதுவும் மாய்ந்திடுமோ ?

ஏக்கம் - அது வாழவும் விடுவதாயில்லை..!

புழுதிக் காற்றிலும்
மண்ணின் வாசத்திலும்
மீண்டும் உருண்டு புரள.,

ஆலமரத்தின் அடியிலும்
என் தாய் மண்ணின் மடியிலும்..
அருதியாய் - நான்
இறுதியாய் - தாங்கி நிற்கும்

மூச்சுக்காற்றுக்காய் ஈர உணர்வுகளுடன்........ :!:

வையாபுரி.
Reply


Messages In This Thread
ஈர உணர்வுகள் ... :!: - by vaiyapuri - 10-04-2003, 07:25 PM
[No subject] - by yarl - 10-05-2003, 07:08 AM
[No subject] - by Paranee - 10-05-2003, 09:04 AM
[No subject] - by AJeevan - 10-05-2003, 03:37 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 01:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)