07-06-2005, 04:03 AM
நோய்க்கு தீர்வு காணாமல் நோய்க்குறிகளுக்கு தீர்வுகாணுவது போல தான் சீதன பிரச்சினைக்கு பலரும் சொல்லும் தீர்வு எனக்கு படுகிறது. சீதனம் சட்டரீதியாக ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது (தமிழீழ பிரதேசத்தில்). ஆனால் இந்த நிலையில் பணத்தில் குறியாக இருப்பவர்கள் வெளிப்படையாகவே நல்ல பணம் படைத்த குடும்பத்து பெண்களை மட்டுமே திருமணம் செய்வதன் மூலம் சட்டத்தடைகளை தவிர்த்து பணத்தின் வசதிகளை திருமணம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
அடிப்படையில் சந்தைவாய்ப்புள்ள எந்த சரக்கும் அதற்கு தட்டுப்பாடுள்ளவரை விலை ஏறிக்கொண்டே போகும் என்பதும் அதனை தடுக்க முயற்சிக்கும் எந்த வரைமுறையும் காலப்போக்கில் பலனளிக்காமல் போகும் என்பதும் உணரப்படும்.
ஆக, சீதனப்பிரச்சினை நோய்க்குறியானால் நோயென்ன?
திருமணத்தை திடீர் பணக்காரராகும் வழியாக பார்ப்பதுதான் இங்கு நோய். இந்த நோய் முற்றக் காரணம், நோயின் தாக்கங்கள் மக்களுக்கு தெரியாமல் பணம் மட்டும் தெரிவதே.
திருமணத்தின் பின் மகிழ்ச்சியாக வாழ்பவர்களில் எத்தனை வீதமானவர்கள் இந்த திடீர் பணக்காரராகும் திருமணத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள் என்று யாராவது ஆய்வு செய்தார்களா? மனமுடைந்து நாளும் பொழுதும் நாயும் புூனையுமாக வாழும் எத்தனைவீதம் இந்த திடீர் பணக்காரராகும் திருமணத்தால் குடும்பங்களானவை?
இவற்றை மக்களுக்கு வெளிப்படுத்தி, கதையாக, கட்டுரையாக, வாழ்க்கை வரலாறுகளாக, இந்த லொட்டரி திருமணங்களையும், மனம் விரும்பி, உனக்கு நானும் எனக்கு நீயும் தான் இனி வாழ்வு என்று உயிருக்கு உயிராகி வாழும் திருமணங்களையும் ஒப்பிட்டு நாம் எமது ஊடகங்களில் மக்கள் மனதில் படுமாறு திரும்பத் திரும்ப உரத்து ஓங்கி சொன்னோமா?
அடிப்படையில் நான் சொல்வதெல்லாம் இளைஞர்கள் பெண்களை அவர்கள் தமது மனநிலை போக்கு பழக்கவழக்கங்களுக்கு பொருத்தமானவரா என்று பார்த்து திருமணம் செய்யும் பண்பாடு எமது சமுதாயத்தில் வழக்குக்கு வர வேண்டும். பெண்களும் பட்டம் பதவிகளை விட்டு ஆண்களின் போக்கு பழக்க வழக்கங்கள் மனநிலை தமக்கு பொருந்துமா என்பதை பார்த்து திருமணம் செய்யும் பண்பாடு வரவேண்டும். பெண்ணின் பெற்றோரும் ஆணின் பெற்றோரும் இவையே திருமணத்துக்கு முக்கியம் பணத்துக்கும் பட்டத்துக்கும் திருமணம் செய்வோர் அறிவற்ற பிற்போக்கான மூடர் என்று குறைவாக பார்க்கும் பண்பாடு சமுதாயத்தில் உருவாக வேண்டும்.
உண்மையில் இப்படியாக பார்க்கும் பண்பட்ட மக்கள் எம் மத்தியில் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் குறைவு.
பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களுக்கு திருமணத்தின் போது அவர்கள் எதை ஏற்றுக்கொள்ளலாம் எதை ஏற்றுக்கொள்ளக் கூடாது? ஏன்? சரியான துணையை தேர்ந்து கொள்வது எப்படி? போன்ற விடயங்கள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். உயர்வகுப்பில் கற்றுக் கொள்ளாமல் பாடசாலையை விட்டு வெளியேறிய பின் யார் கற்றுக் கொடுக்கிறார்கள்?