07-06-2005, 03:11 AM
ஆரணி திருமலைசமுத்திரம் ஏரியில் மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் செய்தனர். தாலி கட்டியதும் மழை பெய்த அதிசயம் நடைபெற்றது.
ஆரணி திருமலைசமுத்திரம் ஏரி மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியின் தண்ணீரைத்தான் அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்காக நம்பியுள்ளனர். ஆனால் மழை பெய்யாததால் ஏரி வறண்டு கிடக்கிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்தனர். பின்னர் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் சேர்ந்து மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் செய்ய தீர்மானித்தனர்.
ஏரியின் மையப் பகுதியில் இரண்டு கழுதைகளுக்கு புரோகிதர் வைத்து அனைத்து சடங்குகளுடனும், மேளதாளங்களுடன் திருமணம் செய்து வைத்தனர்.
கழுதைக்குத் தாலி கட்டியதும் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கு பெண்கள் பொங்கலிட்டு பூஜை செய்தனர்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............