07-05-2005, 04:15 PM
சீதனத்தை நிர்ணயிக்கின்ற காரணிகள் பட்டம் படிப்பு அரசாங்க உத்தியோகம் முக்கிய பங்கு வகித்தன. இங்கு அரச உத்தியோகத்திலுள்ளவர்களை அதிகம் சீதனம் கொடுத்து திருமணம் செய்ய விரும்புவதற்க்கு காரணம் ஒரு வித பாதுகாப்பு பென்சன் போன்ற உத்தரவாரங்களால்----கோழி மேய்த்தாலும் கவர்ணமென்ற் உத்தியோகம் இருக்கோணுமென்று டச்சு காலத்திருந்திலே யே சொல்லிவருவார்கள் என்று கூறுவார்கள் பெரும் தனவந்தர்களே பெரும் சீதனம் கொடுத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் டொக்டர் என்ஜினியரகள் என்பவர்களை போட்டிப்போட்டு வாங்க முற்பட்டார்கள் இது பண்டமாக மாறி கிராக்கி ஏற்பட்டது. போர் உக்கிரம் பெறுமுன் குடாநாட்டு மனபாவம் தலை விரித்தாடியிருந்து. ஆனையிறவு தாண்டி திருமணம் செய்யமாட்டாததன்மை சொத்துக்கள் சொந்த பந்தங்களை விட்டுப்போக்கூடாதன்பதும் கூட சீதனத்தை நிர்ணயிக்கின்ற காரணிகளாக இருந்தன .டச்சுக்காரர் அறிமுகப்படுத்தப்பட்ட தாய்வழி சொத்து முறை மூலம் வரும் சீதன முறமை பெணளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக நித்திலா கூறியிருந்தார் அதே நேரம் ஆண்களுக்கும் முதிசம் என்ற மூறைமையடாக ஆண்களுக்கும் வழ்கப்படடிருக்கிறது.டச்சுகாரர் உருவாக்கிய தேச வழமைச்சட்டத்தினால் தமிழருக்கு சட்ட்த்தில் பாதுகாப்பு அழித்திருக்கிறது என்று அநேகர் கூறுவார்ள். மறு பக்கத்தில் உந்த தேச வழமைச்சட்டம் தான் சீதனத்தை ஊக்குவி்த்ததோ என்று ஜயப்டுகிறேன்.

