07-05-2005, 02:29 PM
kuruvikal Wrote:உங்கள் எல்லோரின் கருத்துப்படி பார்த்தா..தாயகத்தில் சீதனத்தைத் தீர்மானிக்கிறது..படிப்பும் பட்டமும் பதவியும்...என்பது தெளிவு...!
உண்மை. பட்டமும் பதவியும் கூட சீதனம் கூடி கொண்டே போகும். அதிலும் இலங்கையில் அரச பதவிக்கு சீதனம் அதிகம் என்றார்கள். இப்போது தனியார் துறையில் சம்பளம் அதிகமாகிவிட்ட பின்பு மாறிவிட்டதோ தெரியலை.
kuruvikal Wrote:சிறீலங்காவில் படிப்பவருக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது...அந்தப் பட்டம் படிப்பவருக்குச் சொந்தமில்லை...அரசுக்குச் சொந்தம்...அது மக்கள் சொத்து...! எனவே அங்கு படிப்பைக் காட்டி சீதனம் வாங்கும் படித்த முட்டாள்களிடம் அதைப் பறிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்...இதில் புலிகளும் சிறீலங்கா அரசும் இணைந்து செயற்படும் போது... இவை தானா கட்டுப்பாட்டுக்குள் வரும்...சனம் தானாத் திருந்தும் என்று பார்த்திருக்கிறது சில விடயங்களில் முட்டாள் தனம்..!
இந்த விசயத்தில் அதுவும் தற்போதைய சூழலில் சட்டம் கொண்டுவராமல் திருத்த முடியாது போல் தான் இருக்கிறது. தாயக பெண்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலை மூலம் சொந்த காலில் நிற்க கூடிய நிலை வரும் போது கூடுதல் விழிப்புணர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

