07-05-2005, 02:12 PM
உங்கள் எல்லோரின் கருத்துப்படி பார்த்தா..தாயகத்தில் சீதனத்தைத் தீர்மானிக்கிறது..படிப்பும் பட்டமும் பதவியும்...என்பது தெளிவு...!
சிறீலங்காவில் படிப்பவருக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது...அந்தப் பட்டம் படிப்பவருக்குச் சொந்தமில்லை...அரசுக்குச் சொந்தம்...அது மக்கள் சொத்து...! எனவே அங்கு படிப்பைக் காட்டி சீதனம் வாங்கும் படித்த முட்டாள்களிடம் அதைப் பறிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்...இதில் புலிகளும் சிறீலங்கா அரசும் இணைந்து செயற்படும் போது... இவை தானா கட்டுப்பாட்டுக்குள் வரும்...சனம் தானாத் திருந்தும் என்று பார்த்திருக்கிறது சில விடயங்களில் முட்டாள் தனம்..!
புலத்தில் சீதனம் வாங்காம இளைஞர்கள் திருமணம் செய்யக்காரணம்...புலத்தில் பெண்களுக்கு உள்ள அதிக சமூகச் சுதந்திரமும்... அது குடும்பங்களில் செய்யும் செல்வாக்குமே அன்றி வேறில்லை...! அந்தகைய சூழலில் ஆண்கள் பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீதனம் வாங்குவதை தவர்க்கின்றனர்....அது முற்றிலும் ஒரு சுயநல எண்ணமே அன்றி சீதனத்தின் மீதான உண்மையான மனமாற்றமாகத் தெரியவில்லை...மிகச் சிலரே உண்மையில் சீதனத்தை அருவருப்பாக எண்ணி...ஆணுக்குப் பெண் வாழ்க்கைத் துணையே அன்றி விலை கொடுத்து வாங்கி வைக்கும் பண்டம் அல்ல என்று புரிந்து செயற்படுகின்றனர்...!
இதில் வேடிக்கை என்ன தெரியுமா...புலத்தில் உள்ள சில பெண்கள் தாங்களே உழைத்து சம்பாதித்து அதைக்காட்டி தாயகத்தில் மணமகன் தேடும் நிலையை எய்தி இருப்பதுதான்....! இது தவறா சரியா..நீங்கள் தான் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்...!
மேலே உள்ள தகவலின் படி தாயகப் பெண்ணின் மன ஆதங்கம் என்று தாயக ஆண்கள் புலத்துப் பெண்களைத் தேடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று இருக்கிறது... புலத்து ஆண்கள் கடந்த 15 வருடத்துக்கும் மேலாக இறக்குமதி செய்த தாயகத்துப் பெண்களின் தொகையோடு ஒப்பிடும் போது அது சிறிய அளவே...அப்போதெல்லாம் ஏன் இந்தப் பெண்கள் தாயக இளைஞர்களுக்காக குரல் கொடுக்கவில்லை..??!
உண்மையில் புலத்தில் தமிழ் பெண்கள் ஆண்களை விட எண்ணிக்கையில் குறைவு... தாயகத்தில் அப்படியல்ல...பெண்களின் தொகை ஆண்களை விட அதிகம்...எனவே அங்கு ஆண்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் காரணம் உள்ளது என்பதை சமூகம் உணர்ந்து தாயகப் பெண்களுக்கு தாயக ஆண்கள் துணையாக அமைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...! புலத்து ஆண்கள் புலத்துப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே அந்தப் பெண்ணின் ஆதங்கத்துக்கு மிகக் குறைந்தளவு தீர்வாக அமைய முடியும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>