Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகுத்தறிவு!
#7
வணக்கம் அம்பலத்தார் அய்யா...
அப்படியென்றால் எல்லோரும் கனவு காண்பதிலும், தூசு தட்டுவதிலும் தான் இருக்கிறார்கள் என்கிறீர்கள். (என்னையுந்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )

இந்திய விஞ்ஞானி, இன்றைய இந்திய சனாதிபதி மதிப்பிற்குரிய அப்துல் கலாம் இந்திய இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்கிறார்.

அதற்கு பதிலளிக்கும் வண்ணம், திரையிசைக் கவிஞர், தமிழ் கவிஞர் வைரமுத்து அவர்கள் "கனவு காணுங்கள், ஆனால் கண்களைத் திறந்து கனவு காணுங்கள்" என்று கூறியுள்ளார்.

நானும் என்னுடைய ஒரு கவிதையில்:

...
விழி திறந்து
கனவு காண்
விரல் அசைத்து
கவிதை சொல்

மொழி மறந்து
காதல் செய்
முத்தம் நிறைத்து
மோகம் கொள்
...

என்று எழுதியுமுள்ளேன். விழி மூடிக் காணும் கனவுகள் எல்லாம் பலிக்காத கனவுகள். விழி திறந்து கண்ட கனவுகளே முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளன என்பதை வரலாறு சான்று பகர்கிறது.

நிச்சயமாக, நீங்கள் கருதுவது போன்று தீர்க்கமான செயல்கள் தேவை. விழிதிறந்து காணும் கனவுகளை மெய்ப்பிக்க மனிதன் நிச்சயம் முயலுவான்.

தம்பிதாசன் அவர்கள் யாழின் முன்னைய கருத்துக்களத்தில் அற்புதமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவருடைய இந்தக் கவிதையும் அவரது சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உண்மை நிலை பலதையும் உணர்த்துகிறது.

எனவே தொடர்ந்தும் கவிதைகளில் உங்கள் கருத்தை இங்கே பகிருங்கள்.


Reply


Messages In This Thread
பகுத்தறிவு! - by thambythasan - 09-15-2003, 05:34 PM
[No subject] - by sOliyAn - 09-16-2003, 12:33 AM
[No subject] - by thambythasan - 09-16-2003, 02:07 PM
[No subject] - by sOliyAn - 09-16-2003, 02:28 PM
[No subject] - by thambythasan - 09-16-2003, 02:37 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 03:02 PM
[No subject] - by இளைஞன் - 10-03-2003, 06:24 PM
[No subject] - by ampalathar - 10-03-2003, 07:04 PM
[No subject] - by இளைஞன் - 10-03-2003, 09:15 PM
[No subject] - by ampalathar - 10-04-2003, 04:20 PM
[No subject] - by Paranee - 10-04-2003, 04:34 PM
[No subject] - by Paranee - 10-04-2003, 04:35 PM
[No subject] - by shanmuhi - 10-05-2003, 03:44 PM
[No subject] - by nalayiny - 10-08-2003, 02:49 PM
[No subject] - by þ.þº¡ì - 10-09-2003, 05:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)