10-02-2003, 09:00 PM
அஜீவன் அண்ணா உங்கள் கருத்தும் கூட இது விடயத்தில் பக்கச்சார்ப்பானதாகவே படுகிறது....BBC சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பிய ஆசிய நாடகம் ஒன்றில் ஒரு பாகிஸ்தானிய இளைஞன் வேலைத்தளம் ஒன்றில் ஆங்கிலேயப் பெண்மணியால் காதலிக்கப்படுவதும் அதனால் அவன் வீட்டிலிருந்தே துன்புறுத்தப்பட்டு வெளியேறுவதும்...பின் காதல் முறிவதும் என ஒளிபரப்பினர்....!அந்த நாடகத்தில் அவ்விளைஞனின் காதலை ஏற்க மறுத்து அவனது தந்தையை அவனுக்கு எதிராகத் தூண்டிவிடுவது அவனது பாட்டியும் பாட்டாவும்... அது நிஜத்தால் கலந்து பிறந்ததாகவே எமக்குப்படுகிறது....! நீங்கள் குறிப்பிட்டதும் அவ்வகையான ஒன்றே ஆனால் அதற்குள் ஆணாதிக்கச் சாயம் பூசப்படுவதும் துரதிஷ்டவசமானது என்பதை ஏன் நீங்கள் காணத்தவறுகிறீர்கள்....! பெண் என்று பார்ப்பதைவிட மனிதன் என்ற வகையில் ஏன் பார்வையை மாற்ற மறுக்கிறீர்கள்...பெண் பெண்ணாக இருப்பது அவசியமா...?! அவள் மனிதனாக இருப்பது அவசியமா...?! அவள் மனிதனாக இருப்பதே அவளுக்கும் மனித சமூகத்திற்கும் சிறந்தது...அப்போதுதான் அவளும் மனிதனுக்கே உரித்தான உரிமைகளை ஆணுடன் சம அளவில் பங்கிட முடியும் பெண்ணை மனிதனில் விசேடித்தோ அல்லது தாழ்மையானதாகவோ காட்டுவதுதான் சமூகத்தில் பெண்கள் தொடர்பான பார்வைகள் வேறுபடக் காரணமாகிறது...அது மட்டுமன்றி பொதுவான மனித சமூகப் பிரச்சனைகளும் பெண் என்பதற்காய் விசேடித்துப் பார்க்கப்படுவது அதே பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள ஆணைப் பாதிப்படையவும் செய்கிறது என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்....??????????!
:evil: :twisted: :evil:
:evil:
:evil: :twisted: :evil:
:evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

