06-30-2005, 03:05 PM
<img src='http://www.homeoffice.gov.uk/siteimages/global_ho_logo.gif' border='0' alt='user posted image'>
ஐக்கிய ராச்சியத்தில் ஏறத்தாள 570,000 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக உள்துறை அலுவலகம் (Home Office) அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் எதிர்கட்சிகள் சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிகையை விவாதங்களில் கேட்டபோதும் அதற்கு தொழிற்கட்சி அரசு பதிலளிக்கவில்லை, தொழிற்கட்சி குடியேறிகள் விடயத்தில் நெகிழ்வு போக்கை காட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அந்த விபரம் வெளியிடப்பட்டால் அது தேர்தலில் எதிர்ப்பலை உருவாக்கலாம் என்று அப்போது இதற்கு பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்த அரசு இப்போது தேர்தல் முடிந்த நிலையில் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் அரசியல் தஞ்சம் கோரி தற்போது விசாரணையில் உள்ளோரும் அது நிராகரிக்கபட்ட நிலையில் அதனை எதிர்த்து அப்பீல் செய்தோரும் உள்ளடக்கப்படவில்லை.
தற்போது ஐக்கிய ராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை அடையாளம் காணவதற்கு இலகுவான வழிமுறை ஏதும் இல்லை. முக்கியமாக இதனை காரணமாக வைத்தே அடையாள அட்டை திட்டத்தை தொழிக்கட்சி அரசு ஆரம்பித்தது ஆனால் இதற்கு நாடாளும் சபையில் ஆதரவு குறையும் நிலையில் இதன் அவசியத்தை உணர்த்தவே சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிக்கையை இந்த சமயத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கூட மிக குறைவான கணிப்பீடு என்றும் உண்மையில் இதைவிட அதிகமானோர் இருக்கலாம் என்று குடியேறிகளை கண்காணிக்கும் Migration WatchUK அமைப்பு தெரிவித்துள்ளது.
செய்தி ஆதாரம்: பிபிசி இணையம்
ஆங்கிலத்தில் முழுமையாக படிக்க http://news.bbc.co.uk/1/hi/uk_politics/463...7273.stm[/size]

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>