06-30-2005, 01:50 PM
kuruvikal Wrote:அதற்கு முதல்..அவர் முதல் மனைவியோட..ஏன் காதல் இன்றி வாழ்த் தலைப்பட்டார்...??! அதற்கு யார் பொறுப்பு...சமூகமா..அவரா...அதுதான் குடும்பப் பிரச்சனைக்கு காரணமா...அந்த வகையில்... உண்மையில் அவரைப் பொறுத்தவரை இது தூய காதலா...??! இப்படி பல வினாக்கள் தொக்கு நிக்கின்றன...! இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்...! பல குடும்பவியல் சமூகப் பிரச்சனைகளின் அத்திவாரம் இங்கிருந்துதான் எழுகிறது குறிப்பாக கீழைத்தேய நாடுகளில்...!
தூயகாதலை எப்படி வரைவிலக்கணம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் காதல் எப்போது எங்கு யார் மேல் ஏற்படும் என்று நிச்சயமாக கூற முடியாது. அந்த 19 வயது பெண் அன்புக்காக ஏங்கும் நிலையில் இருக்கும் போது இவர் காட்டிய பரிவு கவனிப்பு பிடித்து போக அது பின்பு காதலாக பரிணமித்திருக்கலாம். இது ஒரு கோணம் தான் இதனை போல வேறு விதமான பார்வைகளும் இருக்கலாம்.
மற்றது அந்த நபர் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்தமையால் மனதில் இரண்டாவது திருமணம் செய்வது குறித்த நினைப்பை ஏற்படுத்தியிருக்கலாம். திருமணம் செய்தால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் அவ்வாறு செய்யாமல் பிரிந்து வாழ்வதே பல திருமணங்கள் உடைவதற்கும் சமுதாய சீர்கேடுகளுக்கும் முக்கிய காரணம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

