10-01-2003, 11:29 PM
முகங்கள்.
=======
அடிக்கடி அணிந்து கொண்டதால்
நைந்து கிழிந்த முகங்கள்-
அணியாமல் விடப்பட்டதால்
மக்கிக் கிழிந்த முகங்கள்-
உள்முகத்தை மறைத்து
எந்நேரமும் ஒரே பாவம் காட்டும்
முகமூடி முகங்கள்-
மூடிமறைத்தும்
பிதுங்கித் தெரியும்
உண்மை முகங்கள்-
கோபம் குரூரம் வக்கிரம்
இன்னும் பெயரற்ற ஆயுதங்களால்
குதறி ஓரமாய்க் கிடக்கும்
இரண முகங்கள்-
இன்றைய முகத்தடவலிலோ
திட்டுத் திட்டாய்
நேற்றைய முகங்கள்.
-ஜோதி ராமலிங்கம்-
=======
அடிக்கடி அணிந்து கொண்டதால்
நைந்து கிழிந்த முகங்கள்-
அணியாமல் விடப்பட்டதால்
மக்கிக் கிழிந்த முகங்கள்-
உள்முகத்தை மறைத்து
எந்நேரமும் ஒரே பாவம் காட்டும்
முகமூடி முகங்கள்-
மூடிமறைத்தும்
பிதுங்கித் தெரியும்
உண்மை முகங்கள்-
கோபம் குரூரம் வக்கிரம்
இன்னும் பெயரற்ற ஆயுதங்களால்
குதறி ஓரமாய்க் கிடக்கும்
இரண முகங்கள்-
இன்றைய முகத்தடவலிலோ
திட்டுத் திட்டாய்
நேற்றைய முகங்கள்.
-ஜோதி ராமலிங்கம்-
nadpudan
alai
alai

