06-29-2005, 08:48 AM
காதல் ஒரு ஆச்சரியம்!
* அஞ்சல் அட்டை மாதிரி
திறந்தே இருக்கிறேன்
நீ படிக்கும்படியாக...
தபால் உறையாக
நீ
மூடியே இருக்கிறாய்
நான் தவிக்கும்படியாக!
* காதல் ஒரு ஆச்சரியம்...
அறுபத்திரெண்டு கிலோ எடையை
அந்தரத்தில்
மிதக்க விட்டிருக்கிறது!
* கூட்டமாய் இரை தேடுகிற
கோவில் புறாக்களின்
குணம் இல்லை உனக்கு...
பட்டாம்பூச்சியாக
நீ
தனித்தே பறப்பது
பிடித்திருக்கிறது எனக்கு!
* வானம் பார்த்திருக்கும்
ஏழை விவசாயி போல
எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன்;
பருவ மழையே
எப்போது பெய்வாய் நீ?
* கல்கி அவதாரத்தில்
கடவுள் வைத்த
காலடி போல
கவனமாகத்தான் நடக்கிறாய்...
அது சரி –
எல்லா அடியையும்
ஏன்
என் தலையில் வைக்கிறாய்!
* உண்ட மயக்கத்து
உறக்கமாக இருந்தாலும்
ஒவ்வொரு தடவையும்
உன் முகத்தை
மனக்கண்ணில்
பார்த்து விட்டுத்தான் படுக்கிறேன்;
அதுவே
நீண்ட உறக்கமாகிப் போனாலும்
கடைசியாய் கண்டது
உன் முகமாக இருக்கட்டும்!
க.சந்திரகலா, அதங்கோடு
* அஞ்சல் அட்டை மாதிரி
திறந்தே இருக்கிறேன்
நீ படிக்கும்படியாக...
தபால் உறையாக
நீ
மூடியே இருக்கிறாய்
நான் தவிக்கும்படியாக!
* காதல் ஒரு ஆச்சரியம்...
அறுபத்திரெண்டு கிலோ எடையை
அந்தரத்தில்
மிதக்க விட்டிருக்கிறது!
* கூட்டமாய் இரை தேடுகிற
கோவில் புறாக்களின்
குணம் இல்லை உனக்கு...
பட்டாம்பூச்சியாக
நீ
தனித்தே பறப்பது
பிடித்திருக்கிறது எனக்கு!
* வானம் பார்த்திருக்கும்
ஏழை விவசாயி போல
எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன்;
பருவ மழையே
எப்போது பெய்வாய் நீ?
* கல்கி அவதாரத்தில்
கடவுள் வைத்த
காலடி போல
கவனமாகத்தான் நடக்கிறாய்...
அது சரி –
எல்லா அடியையும்
ஏன்
என் தலையில் வைக்கிறாய்!
* உண்ட மயக்கத்து
உறக்கமாக இருந்தாலும்
ஒவ்வொரு தடவையும்
உன் முகத்தை
மனக்கண்ணில்
பார்த்து விட்டுத்தான் படுக்கிறேன்;
அதுவே
நீண்ட உறக்கமாகிப் போனாலும்
கடைசியாய் கண்டது
உன் முகமாக இருக்கட்டும்!
க.சந்திரகலா, அதங்கோடு
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

