Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பருத்தித்துறை வடை
#2
தேவையான பொருட்கள்:

1 சுண்டு உழுத்தம் பருப்பு
1 சுண்டு அவித்த கோதுமை மா
1 சுண்டு அவிக்காத கோதுமை மா
செத்தல் மிளகாய் கிறஸ் (அதாவது அறுவல் நொறுவலாக இருத்தல் வேண்டும்)
2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
அளவாக உப்பு
சிறிது சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை
விரும்பினால் 2 தேக்கரண்டி எள்ளு

செய்முறை: உழுத்தம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நீர் நன்கு வடிய விட்டு ஒரு பத்திரிகையில் அல்லது வெள்ளைத் துணியில் காய வைக்கவும்.

பின்னர் உழுத்தம் பருப்பு, அவித்த கோதுமை மா, அவிக்காத கோதுமை மா, எள்ளு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சுடு நீரில் உப்பை கலந்து இடியப்பத்திற்கு மாக் குழைப்பது போன்று இறுக்கமான நிலையில் அடித்துக் குழைக்கவும்.

பின்னர் முழு நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக பிடித்து அதனை சான்ட்விச் பாக் (அதாவது சொப்பிங்க் பாக் போன்று இருப்பது நல்லது) ஒரு பேணியை எடுத்து அதில் தட்டித், தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
S.Nirmalan
Reply


Messages In This Thread
[No subject] - by nirmalan - 06-28-2005, 12:00 PM
[No subject] - by Mathan - 06-28-2005, 12:22 PM
[No subject] - by stalin - 06-29-2005, 03:12 PM
[No subject] - by SUNDHAL - 06-29-2005, 03:15 PM
[No subject] - by Mathan - 06-29-2005, 03:22 PM
[No subject] - by Niththila - 06-29-2005, 03:25 PM
[No subject] - by stalin - 06-29-2005, 03:40 PM
[No subject] - by Mathan - 06-29-2005, 03:48 PM
[No subject] - by kavithan - 06-30-2005, 07:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)