06-27-2005, 10:31 AM
தெற்கு லண்டனின் பல பகுதிகளிலும் ஆசிய கலாச்சார நிகழ்ச்சி நடக்க ஏற்பாடாகி இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக நேற்று ஞாயிற்று கிழமை South East London Plumstead Common பகுதியில் ஆசிய கலாச்சார விழா (Asian Mela) நடந்தது. அது ஒரு கலாச்சார விழாவாக மட்டும் அன்றி அந்த பிரதேச ஆசிய மக்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. அந்த பிரதேசத்தில் தமிழ் மக்களின் அளவு குறைவாக இருந்தமையினால் தமிழ் நிகழ்சிகள் அதிகம் இடம்பெறவில்லை. சிறிய தமிழ் குழந்தைகள் தமிழ் கலாச்சார உடையுடன் கலந்து கொண்ட ஆடல் நிகழ்சிகள் நடைபெற்றன. அடுத்த ஆண்டு விழாவின் போது மேலும் தமிழ் நிகழ்சிகளை இடம்பெற செய்யமுடியும் என்று நினைக்கின்றேன்.
15 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சிக்கு Sunrise Radio, Sony Entertainment மற்றும் Western Union உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தனர். இதை தவிர Greenwich council மற்றும் அப்பகுதி தொழிற்கட்சி எம்பி John Austin ஆகியோரும் பக்கபலமாக இருந்ததுடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>