10-01-2003, 09:47 AM
'களங்கள் தாருங்கள் - நாம்
வளமோடுள்ளோம்"
தளங்களை வசமாக்கத் தலைகுனிந்து
தன்மானமிழந்து களம்தேடக் கலையொன்றும்
கத்தரிக்காய் வியாபாரமல்ல....!
கலை !
உணர்வுகளின் பிழியலது ,
ஒரு காலத்தின் பிரசவமது,
பல ஆன்மங்களின் அழுகையது,
சில ஆணவங்களின் அக்கினியது,
நில்லென நிறுத்திச் சொல்லெனச் சொல்லும்
இயந்திரமல்ல அது.
எண்ணியதை எழுதி - அதைநற்
கலைப்படைப்பாக்கி கண்ணுளோர் முன்
கொடுக்கும் கலசமது - அதுவே
கலையின் கலைஞரின் கடமை.
திறமைகளுக்கெங்கே இன்று சந்தர்ப்பம் ?
தரமான கலைக்கெங்கே இன்று கௌரவம் ?
காசிருந்தால் நீயும் கலைஞன்
நானும் கலைஞன்.
இல்லது இன்னும் இலகுவான வழி
குழிபறித்துக் குலப்பெருமை பேசிடின்
கலையாய் , சிறந்த கலைஞராய்
இந்நு}ற்றாண்டின் இலக்கிய ஆசானாய்
எல்லோராலும் வணங்கப்படும் வாரிதிகளாகலாம்......
வளமோடுள்ளோம்"
தளங்களை வசமாக்கத் தலைகுனிந்து
தன்மானமிழந்து களம்தேடக் கலையொன்றும்
கத்தரிக்காய் வியாபாரமல்ல....!
கலை !
உணர்வுகளின் பிழியலது ,
ஒரு காலத்தின் பிரசவமது,
பல ஆன்மங்களின் அழுகையது,
சில ஆணவங்களின் அக்கினியது,
நில்லென நிறுத்திச் சொல்லெனச் சொல்லும்
இயந்திரமல்ல அது.
எண்ணியதை எழுதி - அதைநற்
கலைப்படைப்பாக்கி கண்ணுளோர் முன்
கொடுக்கும் கலசமது - அதுவே
கலையின் கலைஞரின் கடமை.
திறமைகளுக்கெங்கே இன்று சந்தர்ப்பம் ?
தரமான கலைக்கெங்கே இன்று கௌரவம் ?
காசிருந்தால் நீயும் கலைஞன்
நானும் கலைஞன்.
இல்லது இன்னும் இலகுவான வழி
குழிபறித்துக் குலப்பெருமை பேசிடின்
கலையாய் , சிறந்த கலைஞராய்
இந்நு}ற்றாண்டின் இலக்கிய ஆசானாய்
எல்லோராலும் வணங்கப்படும் வாரிதிகளாகலாம்......
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

