06-26-2005, 02:09 PM
<b>அந்த நிலாக்காலத்தின் குறிப்பு</b>
நீ வந்து போன கனவு
கலைந்த
ஒரு விடியற் காலையில்
இரு சொட்டு கண்ணீரில்
தலையணை நனைந்திருந்தது
இன்று போல் இருக்கிறது
உன்னுடனான
உத்தியோக பூர்வ கடைசிச் சந்திப்பு
நிகழ்ந்தது; அல்லது
நமது உறவு முறிந்தது
சில
ஒப்பாரிக் கவிதைகள் எழுதியதும்
பின்னிரவுகளில்
நண்பர்களிடம் கூறி
பெருமூச்செறிந்ததும்தான்
நம்மிடையேயான உறவில்
மிச்சமெனக்கு!
ஏதோவொரு கார்காலத்தில்
நீ தோழியாய் இருந்தாய்
நமது உலகில்
நாம் மட்டுமே என ஆகினோம்
என்று சொல்வதற்கு கூட
கூச்சமாயிருந்தது!
பின் வந்த காலங்களில்
சிலர் உன்னை பற்றி
சொன்னதைக் கேட்ட பிறகு
அந்தக் காலங்கள்
நட்பின் நிலாக்காலங்கள்
நமக்காக மீண்டும் வருமா
தோழி?
நண்பர்கள் உற்றார்
உறவினர் ஊராரைச் எல்லாம்
வந்து வாழ்த்தச் சொல்லி
திருமண அழைப்பிதழ்
அனுப்பியிருந்தாயாம்!
இதில்
எந்த உறவு முறைகளுக்குள்ளும்
என்னை அங்கீகரிக்கவில்லை நீ
என்னைக் கெட்டவனாகவும்
உனது தரப்பை நியாயப்படுத்தவும்
இந் நேரம்
ஆயிரமாயிரம் கதைகளை
சோடித்திருப்பாய்!
உன் திருமண மண்டபம் மாதிரி
உனக்கு எப்படியோ ஆனால்
எனக்கு எல்லாம்
இன்று நடந்தவை போலதான்
இருக்கின்றது
கொஞ்சம் ஈரலிப்பாகவும்
சற்றே பிசுபிசுப்பாகவும்
உனக்காக கண் விழித்த
இரவுகள் போயின!
எனது தோழி நீயென்று
நீயே தந்த உரிமையும்
சுவடின்றி அழிந்தே போனது
இனி
நமது நட்பு பற்றி
அதன் முறிவு பற்றி
உனது காதல் பற்றி
இன்னும்
அது பற்றி.... இது பற்றி...
எது பற்றியும்
உனது பிள்ளைகளிடம்
எதுவும் சொல்லிவிடாதே
அவர்கள் அழுதுவிடுவார்கள்!
நீ வந்து போன கனவு
கலைந்த
ஒரு விடியற் காலையில்
இரு சொட்டு கண்ணீரில்
தலையணை நனைந்திருந்தது
இன்று போல் இருக்கிறது
உன்னுடனான
உத்தியோக பூர்வ கடைசிச் சந்திப்பு
நிகழ்ந்தது; அல்லது
நமது உறவு முறிந்தது
சில
ஒப்பாரிக் கவிதைகள் எழுதியதும்
பின்னிரவுகளில்
நண்பர்களிடம் கூறி
பெருமூச்செறிந்ததும்தான்
நம்மிடையேயான உறவில்
மிச்சமெனக்கு!
ஏதோவொரு கார்காலத்தில்
நீ தோழியாய் இருந்தாய்
நமது உலகில்
நாம் மட்டுமே என ஆகினோம்
என்று சொல்வதற்கு கூட
கூச்சமாயிருந்தது!
பின் வந்த காலங்களில்
சிலர் உன்னை பற்றி
சொன்னதைக் கேட்ட பிறகு
அந்தக் காலங்கள்
நட்பின் நிலாக்காலங்கள்
நமக்காக மீண்டும் வருமா
தோழி?
நண்பர்கள் உற்றார்
உறவினர் ஊராரைச் எல்லாம்
வந்து வாழ்த்தச் சொல்லி
திருமண அழைப்பிதழ்
அனுப்பியிருந்தாயாம்!
இதில்
எந்த உறவு முறைகளுக்குள்ளும்
என்னை அங்கீகரிக்கவில்லை நீ
என்னைக் கெட்டவனாகவும்
உனது தரப்பை நியாயப்படுத்தவும்
இந் நேரம்
ஆயிரமாயிரம் கதைகளை
சோடித்திருப்பாய்!
உன் திருமண மண்டபம் மாதிரி
உனக்கு எப்படியோ ஆனால்
எனக்கு எல்லாம்
இன்று நடந்தவை போலதான்
இருக்கின்றது
கொஞ்சம் ஈரலிப்பாகவும்
சற்றே பிசுபிசுப்பாகவும்
உனக்காக கண் விழித்த
இரவுகள் போயின!
எனது தோழி நீயென்று
நீயே தந்த உரிமையும்
சுவடின்றி அழிந்தே போனது
இனி
நமது நட்பு பற்றி
அதன் முறிவு பற்றி
உனது காதல் பற்றி
இன்னும்
அது பற்றி.... இது பற்றி...
எது பற்றியும்
உனது பிள்ளைகளிடம்
எதுவும் சொல்லிவிடாதே
அவர்கள் அழுதுவிடுவார்கள்!
----------

