09-30-2003, 09:43 PM
இனியனே வருக
இனியன தருக!
யாழ் இணையத்தளத்தின் தோற்றம் இன்றையது அல்ல. அது நேற்றைக்கு முந்தநாள் தோன்றி, காய்த்துப் பழுத்த கனிமரம். CGI Script இலிருந்து PHP Script வரையும் தன்னை மாற்றி மாற்றிப் புதிதாய் அவதாரம் எடுத்த தளம். இன்னும் அவதரிக்கும். இணையத்தில் தமிழில் தமிழர்க்காய்த் தோன்றிய முதல் கருத்தாடல் தளங்களில் யாழ் கருத்துக்களமும் ஒன்று. (யாழ் கருத்துக்களம் மட்டும் ஒன்று!?)
இனியனின் வருகையின் இத்தருணத்தில் பொறுப்பாளரிடம் ஒரு பொறுப்பை முன்வைக்கிறேன். யாழ் இணையத்தின் தோற்றத்திலிருந்து, இன்றைக்கு வரையிலான அதன் வளர்ச்சி பற்றிய ஒரு வரலாற்றுக் கட்டுரையை நமக்காய் வழங்குமாறு நட்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இனியன தருக!
inian Wrote:வணக்கம்.. <b>தமிழில் இத்தகைய புத்தம்புது இணையத் தளங்கள் </b> வருவது மிகவும் மகிழ்வைத் தருகிறது .. இத்தகைய களம் அமைத்த பெரியோருக்கும் .. துணை நிற்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லி இங்கு நுழைகின்றேன் ....