06-13-2005, 08:25 PM
அண்ணாமாரே அக்காமாரே வெறும் வாய்ச்சவடால் மாத்திரம் போதாது. படைபலம் மிக மிக அவசியம். நாலாம்கட்ட ஈழப்போருக்கு ஆதரவுதேடும் நீங்கள் ஏன் அங்குசென்று போருக்கு ஆட்பலம் சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கேள்வி. சுனாமிக்குப்பின் நடைபெற்ற அத்தனையும் தமிழருக்குப் பாதகமாகவே அமைந்திருக்கின்றது. எந்தவெரு நாடுகூட நம்பகுதிகளுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்குவதற்கு சம்மதிக்கவில்லை. அப்படியிருக்க வாய்ச்சவடால் வெற்றியைமட்டும் வெற்றியாகக் கணிக்கும் நமது தமிழர் பண்பாட்டுக்குமட்டும் இங்கு குறைவு இல்லை.யதார்த்தத்துக்கு வாருங்கள். நமக்கு படைபலம் தேவை உங்களில் எத்தனைபேர் உங்கள் வளர்ந்த பிள்ளைகளை போருக்கு அனுப்ப தயாராக உள்ளீர்கள்? அப்படி அனுப்புவதற்கு உங்களுக்கு விருப்பமின்மையாயிருந்தால் போருக்காக கூச்சலிடுவதை விடுங்கள். சமாதான வழிமுறைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்

