06-13-2005, 02:33 PM
Marapu Wrote:அன்பே!
எனது காதல்
நீயூம் புரிந்து கொள்ளாமல்
எழுதிய நானும் விளக்கமுடியாத
புதுக் கவிதையாக போய் விடுமோ என்று
அச்சம் தரும் வகையில் நிகழ்தகவு அதிகரித்து செல்கிறது.
மலரே!
எனக்குள் உன்னைத் தேடவும்
உனக்குள் என்னைத் தேடவும்
புரியும் படி ஒரு கவிதை செய்வோம்
<b>மரபுகளை மீறும் மரபுக்குள்</b> நின்று...!!!
உண்மைதான் மரபு. மரபுகளை மீறுகின்ற கவிதைகளாக இருந்தால் கூட அந்தக் கவிதை தன்னகத்தே ஒரு மரபை இலக்கணத்தைக் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அது கவிதையென்கிற நிலையை அடைய முடியும். மலரே (புளித்துப்போன ஒன்றாகிவிட்டது இன்று) என்பதற்குப் பதிலாக வேறோர் சொல் இட்டிருந்தால், உங்கள் இறுதி இரண்டு வரிகளின் கம்பீரத்திற்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கும். நன்று. தொடருங்கள்.

