![]() |
|
மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!! (/showthread.php?tid=4099) |
மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!! - Marapu - 06-12-2005 அன்பே! எனது காதல் நீயூம் புரிந்து கொள்ளாமல் எழுதிய நானும் விளக்கமுடியாத புதுக் கவிதையாக போய் விடுமோ என்று அச்சம் தரும் வகையில் நிகழ்தகவு அதிகரித்து செல்கிறது. மலரே! எனக்குள் உன்னைத் தேடவும் உனக்குள் என்னைத் தேடவும் புரியும் படி ஒரு கவிதை செய்வோம் மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!!! - kavithan - 06-12-2005 வாழ்த்துக்கள் மரபு ,உங்கள் கவியாக்கத்தை தொடருங்கள். - Malalai - 06-12-2005 மரபுக்கே மரபு எழுதியிருக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 06-12-2005 வாழ்த்துக்கள் மரபு - Marapu - 06-12-2005 நன்றிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு - poonai_kuddy - 06-12-2005 நிகழ்தகவு எண்டால் என்ன மரபு அண்ணா எனக்கு அந்த சொல்லு விளங்கல. கவிதை நல்லாருக்கண்ணா. நீங்கள் நல்லா கவிதை எழுதுவீங்களோ அண்ணா வேற இருந்தால் போடுங்கோவன் வாசிக்கிறதுக்கு - Marapu - 06-12-2005 நன்றிகள் பூனைக் குட்டி உங்களுக்கு நிகழ்தகவு என்ற சொல்லின் பொருள் அறிய உங்களுக்கு பரீச்சையமான மொழி ஒன்றி அகராதியை கையில் எடுங்கள். நிகழ்தகவு என்பதை சந்தர்ப்பம் என அண்ணளவாக எடுத்துக் கொள்ளலாம். யாழ் களத்தில் யாராவது எங்களுக்கு உதவாமலா போகபோகிறார்கள்??? - poonai_kuddy - 06-12-2005 ஒரளவு விளங்கிட்டண்ணா என்னட்ட தமிழகராதியில்லயண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஆனா எனக்கொண்டு விளங்கேல அண்ணா. என்னெண்டா நீங்கள் Quote:மலரே!எண்டு எழுதினீங்க தானே மரபுக் கவிதை புரியாதெண்டு சொல்றீங்களாண்ணா? ஆனா மரபுகள மீறின நிறைய புதுக்கவிதையெண்டுறதுகள வாசிச்சனான். அதுவும் எனக்கு பலது விளங்கேலயே அண்ணா. - Vasampu - 06-12-2005 மரபு(வின்) கவிதைக்கு வாழ்த்துக்கள். - shanmuhi - 06-12-2005 மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று மரபாய் மாறி வடித்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்... - Niththila - 06-12-2005 மரபுவின் கவிதைக்கு வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-13-2005 மரபுவின் கவிதைக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள் - kuruvikal - 06-13-2005 மரபுவும் "மலரோடு" கவிதை கொண்டு வந்திருக்கார்..வாழ்த்துக்கள் மரபு..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Re: மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!! - இளைஞன் - 06-13-2005 Marapu Wrote:அன்பே! உண்மைதான் மரபு. மரபுகளை மீறுகின்ற கவிதைகளாக இருந்தால் கூட அந்தக் கவிதை தன்னகத்தே ஒரு மரபை இலக்கணத்தைக் கொண்டிருக்கவேண்டும். அப்போதுதான் அது கவிதையென்கிற நிலையை அடைய முடியும். மலரே (புளித்துப்போன ஒன்றாகிவிட்டது இன்று) என்பதற்குப் பதிலாக வேறோர் சொல் இட்டிருந்தால், உங்கள் இறுதி இரண்டு வரிகளின் கம்பீரத்திற்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கும். நன்று. தொடருங்கள். - Marapu - 06-13-2005 கவிதை பற்றி கருத்துகள் தந்த அனைவருக்கும் நன்றிகள். இளைஞனின் விமர்சனம் மிக பயனுள்ளது. நன்றி. |