Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகம்
#1
<b>தாயகம்</b>
(இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை)

வேர்கள் இல்லை
விழுதுகள் இல்லை
தொப்புள்கொடி உறவுமில்லை
எதனுடனும் தொடர்பில்லை
விரிந்து கிடக்கும்
வானத்தைத் தவிர

அந்தக் கதிரவன்
அந்த மழை
அந்த மேகங்கள்
ஏன் இந்த நிலம் கூட
இங்கு வேறுதான்

இங்குள்ள வீடுகளுக்கும்
வேறு முகங்கள்

தாயகசோகத்தோடு
சாவதற்கு மனமில்லை
ஆனாலும்
தாயகநினைவலைகள்
மனதுக்குள் விரிகின்றன

தாயகம் என்பது
வெறும் வார்த்தையல்ல
அது நாம் நமக்குள்
சுமக்கின்ற நெருப்பு!


Reply


Messages In This Thread
தாயகம் - by இளைஞன் - 06-13-2005, 12:46 AM
[No subject] - by kavithan - 06-13-2005, 12:49 AM
[No subject] - by இளைஞன் - 06-13-2005, 12:54 AM
[No subject] - by kavithan - 06-13-2005, 12:59 AM
[No subject] - by Mathan - 06-13-2005, 06:55 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)