![]() |
|
தாயகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தாயகம் (/showthread.php?tid=4093) |
தாயகம் - இளைஞன் - 06-13-2005 <b>தாயகம்</b> (இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை) வேர்கள் இல்லை விழுதுகள் இல்லை தொப்புள்கொடி உறவுமில்லை எதனுடனும் தொடர்பில்லை விரிந்து கிடக்கும் வானத்தைத் தவிர அந்தக் கதிரவன் அந்த மழை அந்த மேகங்கள் ஏன் இந்த நிலம் கூட இங்கு வேறுதான் இங்குள்ள வீடுகளுக்கும் வேறு முகங்கள் தாயகசோகத்தோடு சாவதற்கு மனமில்லை ஆனாலும் தாயகநினைவலைகள் மனதுக்குள் விரிகின்றன தாயகம் என்பது வெறும் வார்த்தையல்ல அது நாம் நமக்குள் சுமக்கின்ற நெருப்பு! - kavithan - 06-13-2005 நன்றாக இருக்கு கவிதை .. மொழிபெயர்ப்பு கவிதையா.. நீங்கள் தான் அதனை எழுதியதுமா..? வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 06-13-2005 யேர்மன் மொழியில் வேறு ஒருவரால் எழுதப்பட்ட வரிகள் (கவிதையாக அல்ல). தமிழில் மொழிபெயர்க்கும் போது நன்றாக வந்தது. அதான் கவிதைப் பகுதியில் இட்டேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 06-13-2005 இளைஞன் Wrote:யேர்மன் மொழியில் வேறு ஒருவரால் எழுதப்பட்ட வரிகள் (கவிதையாக அல்ல). தமிழில் மொழிபெயர்க்கும் போது நன்றாக வந்தது. அதான் கவிதைப் பகுதியில் இட்டேன். <!--emo&அப்படியா .. ஆனால் மிக நன்றாக இருக்கின்றது. நல்ல வரிகள் - Mathan - 06-13-2005 நன்றி, நல்ல ஜேர்மன் மொழி வரிகளை கவிதைகளை சந்திக்கும் போது அவற்றை தொடர்ந்து மொழிபெயர்ப்பு செய்து அறிய தாருங்கள் |