06-11-2005, 08:32 PM
ஆம்ஸ்டர்டாம் மலருக்கு ஐஸ்வர்யாராய் பெயர்
<img src='http://cinesouth.com/images/new/11062005-THN15image2.jpg' border='0' alt='user posted image'>
முன்பு இந்தியா என்றதும் வெளிநாட்டவர்களுக்கு காந்தியும், காதலின் சின்னம் தாஜ்மஹாலும்தான் நினைவுக்கு வரும். இப்போது கூடுதலாக ஐஸ்வர்யாராய்!
கடந்த ஆண்டு அதிக அட்டைப்படங்களை அலங்கரித்த ஒரே அழகி ஐஸ்வர்யாராயாகத்தான் இருக்கும். ராயபுரத்தில் தயாராகும் பத்திரிகையிலிருந்து ரஷ்யாவில் வெளியாகும் பத்திரிகை வரை உலகின் முன்னணி பத்திரிகைகள் அனைத்தும் இவர் படத்தை வெளியிட்டு தங்களை அலங்கரித்துக்கொண்டன.
இதில் கூடுதல் சிறப்பாக, உலகின் ஐம்பது அழகிய பெண்களின் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். இதில் ஒன்பதாவது இடம் நம் முன்னாள் உலக அழகிக்கு! இத்துடன் நிற்கிறதா இவர் புராணம்.... இல்லை. லெதர்லாந்து அரசாங்கத்துக்கு ஐஸ்வர்யாராயின் அழகை கௌரவப்படுத்தியே ஆகவேண்டும் என்று தணியாத ஆர்வம். ஆம்ஸ்டர்டாமுக்கு ஐஸை அழைத்து, அங்கு மலரும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் அழகான மலர் ஒன்றுக்கு ஐஸ்வர்யாராய் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டவர் நெதர்லாந்து சுற்றுலா இயக்குனர் ஹான்ஸ் வான் டிரையம்.
தங்கள் நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த யார் யாரோ என்னென்ன முயற்சிகளோ எடுக்கிறார்கள். நாம்தான் வெண்ணெய்யை கையில் வைததுக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம்.
சினி சவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>