06-11-2005, 05:27 PM
எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
Saturday, 11 June 2005
-----------------------------------------------------------
சமாதானம் உணர்ச்சிமயமான இடங்களுக்குள்ளால் வெடித்து மேலெழும்பி யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை சின்னாபின்னமாக்கி விடும் போல் தெரிகிறது. தமிழர்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு (கிழக்கு) பொருளாதாரத் தடையை நீக்கக் கோரியும் புதிய காவலரண்கள், சோதனைச் சாவடிகள் அமைப்பதை நிறுத்தக்கோரியும் ஆக்கிரமிப்பின் அடையாளப்பொருளாக சிங்கள தேசத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த புத்தர் சிலை தமது பிரதேசத்தில் நிர்மானிக்கப்படுவதை அகற்றக்கோரியும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.
தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டுவிடப் போவதாக சர்வதேசப் பரபரப்புகளை ஏற்படுத்தி விட்ட சமாதானத்தில் இன்று தமிழர்கள் எதற்கெல்லாம் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.
சமாதானம் நீளநீள இப்படிக் கஞ்சிக்கும், கூழுக்கும், கிலுகிலுப்பைக்கும் போராட்டம் நடத்தவேண்டி இருப்பது இரத்தம் சிந்திப் போராடிய மக்களுக்கு ஒரு துர்க்குறியே அல்லாமல் வேறென்ன?
நின்று போன பேச்சுவார்ததையை மீளத் தொடங்குவதா, இல்லையா? என்ற பேச்சுக்கூட இல்லாமல், போட்ட காவலரணை மீள எடுப்பதா, வைத்த சிலையை மீளப் பெறுவதா என்ற பேச்சுக்குள் சிக்குப்பட்டுக் கிடக்கிறது சமாதானம்.
இப்படிச் சின்னத்தனங்களுக்குள் சிக்கவைத்து விட்டுக் கொடுப்பது, விடாப்பிடியாக நிற்பது,விசாரணை நடத்துவது என்று காலவிரயம் செய்து காலத்தால் இலாபம் ஈட்டிக்கொள்ளும் சிங்களத்து அரசியல் தமிழர்களுக்குப் புதிதல்ல.
ஆனால் இம்முறைச் சமாதானம் சர்வதேசத்தின் கவனம், ஈடுபாடு, கண்காணிப்பு ஆகியவற்றால் காவலிடப்பட்டிருக்கிறது என்றுதான் தமிழர்கள் நம்பினார்கள்.வழமைப் பிரகாரமாய் இம்முறையும் ஆகிவிடாது என்ற எண்ணத்தில்தான் காலெடுத்தும் வைத்தார்கள்.
எல்லாமே பொய்யாகிப் போகிறது. நாய்வாலை நிமிர்த்த எங்களால் இயலாது என்று தெரியும். வெள்ளையராலும் இயலாதென்று இப்பொழுதுதான் விளங்க வேண்டியதாயிற்று.இன்றும் சிலகாலம் நீண்டால் தமிழர்கள் எதற்கெல்லாம் போராடட்டம் நடத்தவேண்டி நேரிடுமோ?
வரப்போவது சமாதானம் என்றால் புண்களைத் தாங்கியாவது பொறுத்திருக்கலாம்.வரப்போவது யுத்தம்தான் என்பது அனேகமாக எல்லோர் கண்களுக்கும் தெரிந்து விட்டது.அது நாளை வந்தால் என்ன? இன்று வந்தால் என்ன?
நன்றி: ஆசிரியர் தலையங்கம்:
‘சுதந்திரப் பறவைகள்’
(விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடு)
பங்குனி, சித்திரை, வைகாசி 2005 இதழ்
கணனித் தட்டச்சு : திரு (ரஷ்யா)