Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நான்காம் கட்ட ஈழப்போர்: பலமும் படையுத்தியும்
#7
narathar Wrote:
Sooriyakumar Wrote:கரி அண்ணா சண்டைபிடிக்க போராளிகளே இல்லாமல் எப்படி சண்டைபிடிப்பது?. எப்படி வெற்றிபெறுவது? யதார்த்த நிலைமை உண்மையான நிலை அப்படியிருக்க வாய்தர்க்கத்தால் வெற்றிபெற்றால்மட்டும் போதுமா?



சண்டையென்பது வெறும் ஆள் எண்ணிகையில் தங்ஙியில்லை, அது வீவேகத்திலும்,வீரத்திலும் தங்கி உள்ளது.களம் எங்கு எங்கு விருயுது எண்டு பாருன்கோவன்.

நாரதர் கூறியது முற்றிலும் உண்மை.

உதாரணமாக 1992ம் ஆண்டு சிங்களத்தின் கெமுணுவாம் டென்சில் கொப்பேகடுவ தலைமையில் யாழ் நகரை ஆக்கிரமிக்க 40 ஆயிரம் சிங்களப்படைகள் கனரக சூட்டுவலுக்கொண்ட ஆயுதங்களுடன் களமிறங்கத்தயாரானபோது அப்போது எமது கதை முடிந்தது என யாழ் தமிழர்களே எண்ண, தமிழர் தலையில் பாரிய இடிவிழுத்த சிங்களம் களமிறங்கும் சில மணி நேரங்களுக்கு முன் மூக்கிலே விரல் வைக்குமாற்போல் எமது தலைவன் கொடியவர்களிடம் இருந்து எம்மைக் காப்பாற்றினான். அது அன்றைய வரலாறு சிங்கள இராணுவ மேலாளரோடு வடபிரார்திய கட்டளைப்பீடமே பரலோகம் போனது அராலித்துறையில். என்ன மறந்துவிட்டீர்களா ?

யாப்பாபடின சேவையில் புலிகளின் கடைசி நாட்கள் எண்ணப்படுகிறது. அதனால் அதை எண்ணும்போது அவர்களுக்கு அவர்களை அறியாமலே சிறுநீர் கழிகிறது என கொச்சைத்தமிழில் பேசிய யாழ் சிங்களத்தளபதி விஜயவிமலரத்தின தனது கடைசி நாட்கள் எண்ணப்படுகிண்றது என்பதை கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
அது அன்று.
இன்றோ யாழ்குடநாட்டை எதிரி வலைப்பின்னல் போல் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளான். அத்தோடு தமிழ் துரோக கும்பல்களும் அங்கு தாராளமாகவே அலைகின்றனர். பாரிய யுத்தத்திற்கு தாம் ஈடுகொடுக்க தயார் என்பது போல் சிங்களப்படைகளும் காவலரண்களை அமைத்து அதை பலப்படுத்தியும் வருவதை காணக்கூடிதாக இருந்தது. அப்பால் வன்னியில் புலிப்படையும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது காணக்கூடியதாகவே இருந்தது. தரைப்படை, கடற்படை, வான்படை, அத்தோடு உப படைப்பிரிவுகளான ஆட்டிலறிப் படை, கவசப்படை, கவச எதிர்ப்புப் படை, விசேடமாக ஒருகுழல் எறிகணை செலுத்தியிலிருந்து மல்றிபரல் எனப்படும் பலகுழல் எறிகணைகளை ஏவுவதற்கு பல்வேறு பெயர்களில் படையணிகள், அத்தோடு விசேட தாக்குதல் - மின்னல் வேக தாக்குதல் அணிகள். என்வற்றோடு கட்டளையிடுங்கள் கதை முடிக்கிறோம் என தமிழீழம் மீட்க்க தமிழ்ப்படைகள் தயாராகவே உள்ளன.

தக்க தருணத்தில் எங்கள் தலைவன் சொல்லி அல்ல செய்து காட்டுவான். அதனால் நாம் எமது மனங்களில் தேவை இல்லாதவற்றை நினைத்து கலங்காமல் தலைவனின் கைகளை புலத்தில் இருந்து பலப்படுத்துவோம்.

தலைவன் இன்னும் பொறுமைகாக்கிறான் அதனால் இன்னும்................

இதை நான் சுனாமியின் போது இலங்கை சென்று அங்கிருந்து தமிழீழம் சென்றபோது காண - கேட்க கூடியதாய் இருந்தது.
Reply


Messages In This Thread
[No subject] - by Sooriyakumar - 06-10-2005, 07:13 PM
[No subject] - by hari - 06-10-2005, 07:24 PM
[No subject] - by Nilavan - 06-10-2005, 08:19 PM
[No subject] - by cannon - 06-10-2005, 08:39 PM
[No subject] - by narathar - 06-10-2005, 10:29 PM
[No subject] - by ஊமை - 06-10-2005, 11:57 PM
[No subject] - by kuruvikal - 06-11-2005, 12:20 AM
[No subject] - by narathar - 06-11-2005, 05:27 PM
[No subject] - by Thala - 06-12-2005, 02:04 AM
[No subject] - by kurukaalapoovan - 06-12-2005, 03:59 PM
[No subject] - by Mathan - 06-13-2005, 06:34 AM
[No subject] - by Sooriyakumar - 06-13-2005, 08:25 PM
[No subject] - by இவோன் - 06-13-2005, 08:47 PM
[No subject] - by Bond007 - 06-14-2005, 03:07 PM
[No subject] - by வெண்ணிலா - 06-14-2005, 03:24 PM
[No subject] - by nirmalan - 06-14-2005, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)