06-09-2005, 01:33 PM
ஆனாண்ணா இங்க இருக்கிற ஆக்களால மொத்த எங்கட தமிழ் சனமும் முன்னேறியிருக்கா? எனக்கெண்டா முன்னெறின மாதிரித் தெரியேல. ஒண்ட சொல்லோணுமண்ணா வெளிநாட்டுக்கு வந்து நாங்கள் பெரிய பெரிய கோவிலெல்லாம் கட்டியிருக்கிறம் அதுக்குள்ள அர்ச்சன காசு வாங்குறதுக்கு மெசினெல்லாம் பூட்டியிருக்கிறம் உது முன்னேற்றந்தானண்ணா. எண்டாலும் எங்கட சனம் இவங்கட நாட்டில எங்கட கோயில கட்டிக் காட்டிட்டுது பாருங்கோவன். ஐயர்மார் பூசை செய்யிறதுக்கு பதில ஒரு ரொபோட்டீடாவையும் செய்து அத பூச செய்ய வச்சா இன்னும் முன்னேறிடலாம். மற்றது வீட்டில இருந்து லண்டன் கோயிலில அர்ச்சனை செய்யிற மாதிரி இன்ரர்நெற் கணக்சன் குடுத்து அங்க வெப்காம பூட்டி வச்சால் அம்மா கற்பனை செய்யவே பெருமையா இருக்கு.

