Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெள்ளவத்தையில் ஒருவர் சுட்டுக்கொலை.
#19
கொழும்பில் F-File நடவடிக்கை.
புதன்கிழமை 8 யூன் 2005 பிறைசூடி றமணன்
<img src='http://www.nitharsanam.com/public/gallery/europe/presiden.jpg' border='0' alt='user posted image'>

கொழும்பு மாவட்டம் "இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு பச்சைப் புலிகளின்" கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு முதலாவதாக F-File நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கொழும்பில் "இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு பச்சைப் புலிகளின்" ஆரம்பிக்கபட்டுள்ள F-File நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு வருவபவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களின் வருகையினைக் கட்டுபடுத்த முடியும் என்று இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு கருதுகின்றது. யாழ் மாவட்டத்தில் இருந்தும் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்தும் வரும் இளைஞர்களை இனங்கண்டு இவர்களைத் தொடர்சியாக F-File நடவடிக்கை மூலம் அழிப்பதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் உறுப்பினர்களுக்கும் அச்சத்தை உண்டு பண்ண முடியும் எனவும் இலங்கையரசு கருதுகின்றது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே கொழும்பில் தங்கியிருந்த பூநகரியைச் சேர்ந்த இளைஞன் வெள்ளவத்தையிலும் பாசையூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொட்டாஞ்சேனையிலும் கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் எவரும் விடுதலைப் புலிகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரித்தவர்களோ அல்லது விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்புடையவர்களோ இல்லை. இந்தக் கொலைகள் மூலம் இலங்கையரச புலனாய்வுப் பிரிவினரும் அவர்களுடன் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் அரசிற்கான புலனாய்வு வேலைகளில் ஈடுபடும் ஈ.பி.டி.பி யினரும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகப் பீதிப்போரை ஆரம்பித்துள்ளார்கள்.

இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமானவர்கள் கொழும்பில் தங்கிருக்க மாட்டார்கள் என்று இவர்கள் கருதுகின்றார்கள். இதே போன்ற ஒரு நடவடிக்கையினை கொல்லப்பட்ட முத்தாலிப் கிழக்கு மாகாணத்திலும் வவுனியாவிலும் மேற்கொண்டிருந்தார்.

பிரேமதாசா ஜே.வி.பி யினரை அளிப்பதற்கு உருவாக்கிய "இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு பச்சைப் புலிகளிகள்" தற்போது சந்திரிகா அம்மையார் கொழும்பில் தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இதன்மூலம் கொழும்பில் பல தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டேன் என்று உலகத்திற்குக் காட்டும் வேலையில் மூன்று அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று தமிழ்ப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் F-File நடவடிக்கை மூலம் எந்த ஒரு உண்மையான புலிகளையும் இவர்களால் கொழும்பில் கொல்ல முடியாது என்பதே உண்மையாகும். இந்த F-File நடவடிக்கை கிழக்கில் இருந்து கொழும்புக்கும் நகர்ந்துள்ளது.
nitharsanam
Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 06-06-2005, 01:19 PM
[No subject] - by shanmuhi - 06-06-2005, 01:57 PM
[No subject] - by kuruvikal - 06-06-2005, 03:04 PM
[No subject] - by Danklas - 06-06-2005, 03:33 PM
[No subject] - by kuruvikal - 06-06-2005, 05:34 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 05:56 PM
[No subject] - by anpagam - 06-06-2005, 06:17 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 06:20 PM
[No subject] - by hari - 06-06-2005, 06:23 PM
[No subject] - by anpagam - 06-06-2005, 06:31 PM
[No subject] - by kuruvikal - 06-06-2005, 07:00 PM
[No subject] - by Sriramanan - 06-06-2005, 08:25 PM
[No subject] - by Mathan - 06-06-2005, 11:53 PM
[No subject] - by hari - 06-07-2005, 09:07 AM
[No subject] - by sathiri - 06-07-2005, 09:18 AM
[No subject] - by anpagam - 06-08-2005, 02:36 AM
[No subject] - by vasisutha - 06-08-2005, 03:08 PM
[No subject] - by hari - 06-08-2005, 03:40 PM
[No subject] - by Niththila - 06-09-2005, 12:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)