![]() |
|
வெள்ளவத்தையில் ஒருவர் சுட்டுக்கொலை. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வெள்ளவத்தையில் ஒருவர் சுட்டுக்கொலை. (/showthread.php?tid=4145) |
வெள்ளவத்தையில் ஒருவர் சுட்டுக்கொலை. - hari - 06-06-2005 <b>வெள்ளவத்தையில் ஒருவர் சுட்டுக்கொலை.</b> ஜ திங்கட்கிழமைஇ 6 யூன் 2005 ஸ ஜ செந்தோழன் இன்று ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தை, நெல்சன் பிளேஸ் பகுதியில் வைத்து கிளிநொச்சி பூநகரியைந் சேர்ந்த வீரபாகு இந்திரகுமார்(27) என்பவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தற்சமயம் இவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் காற்சட்டைப் பைக்குள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கொழும்பு சென்று வருவதற்கான அனுமதிப் பத்திரம் இருந்துள்ளது. Tamil youth killed in Colombo [TamilNet, June 06, 2005 06:29 GMT] Mr. Veerabahu Inthirakumar, 27, was shot by unidentified gunmen at Nelson Place, Wellawatte, Colombo Monday early morning 2.30 AM, Police said. The victim succumbed to gunshot injuries at Kalubowila Hospital in Colombo. Wellawatte Police Officer In-Charge (OIC), Nigal Mendis is conducting investigations into the killing. - வெண்ணிலா - 06-06-2005 ஒவ்வொன்றாக சுட்டு சுட்டே சாக்காட்டுறாங்கபா. இருக்கவே பயமாக இருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:
- shanmuhi - 06-06-2005 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> hock: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x
- kuruvikal - 06-06-2005 பயப்பிடாதேங்க தங்கையே... காலம் வழிவிடும்..துன்பங்கள் எல்லாம் தீரும்...! :roll:
- Danklas - 06-06-2005 kuruvikal Wrote:பயப்பிடாதேங்க தங்கையே... காலம் வழிவிடும்..துன்பங்கள் எல்லாம் தீரும்...! :roll: ஜோவ்வ் பீஏ என்ன லொள்ளா? நம்மளதும் நம்மட "றோ"வினது கொள்கை என்னெண்டு தெரிந்தும் இப்படி நீர் தமிழருக்கு அதரவா கதைக்கிறது நல்லதுக்கில்லை.. நம்மட கூட்டனிகொள்கை என்னென்பதை திரும்பவும் ஞாபகபடுத்திறன் இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை வாழவிட்டாலும் எங்களின் தெய்வங்கள் (இந்தியா & றோ) வாழவிடக்கூடாது என்பது. சப்போஸ் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் தமிழீழத்தை அடைந்தாலும் சேது சமுத்திரம் எண்ட ஒரு பொருளை நகர்த்தி தமிழீழத்தில் பிரச்சினைகளை உண்டுபண்ணியே தீரும்.. அதற்க்குத்தானே நம்மளைப்போல ஆட்களை ஒன்று சேர்த்து எங்களுக்கும் இறைச்சி துண்டைப்போட்டு வளர்க்கிறார்கள்... :evil: :oops: :evil: - kuruvikal - 06-06-2005 பீஸ் எண்டிட்டு பீஏ இல்லாத நேரமாப் பாத்து போட்டுத்தள்ளுறியள் போல...ஆளை இங்கால காண....நடக்கட்டும்... காலம் கிட்டிட்டுப் போல...! :roll: - Mathan - 06-06-2005 கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு. - anpagam - 06-06-2005 :| :roll:
- Mathan - 06-06-2005 நீங்களும் அழுகிறீர்களா? உங்கள் முகபாவனைக்கு என்ன அர்த்தம்? - hari - 06-06-2005 Mathan Wrote:கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு.புலி உறுப்பினர் போலத்தான் தெரிகிறது, கிளிநோச்சியில் இருந்து வருபவர்களை உளவு பார்த்து தாக்குகிறார்கள் போல இருக்கு! :?: கருணா நாய், டக்கிளஸ் பேய் எல்லாம் சேர்ந்து நடத்தினம் பார்ப்பம் எவ்வளவு காலம் என்று :evil: - anpagam - 06-06-2005 மீண்டும் கொழும்பில் சுற்றிவளைப்புக்கள் விசேடமாக ஓடியவர்களுடன் சேர்ந்து குதூகலமாக நடக்கலாம்... :x மீண்டும் வேதாளம் மரத்தில் ஏறுதிறது. :| <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 06-06-2005 Mathan Wrote:கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு. புலி உறுப்பினர்கள் தான் வன்னியில் இருந்து வருவார்கள்..இதுக்கு ஒரு புலனாய்வு அவசியமா.... புலிகள் அவர்களை புலனாய்வுக்குப் பயன்படுத்தவும் மாட்டார்கள்....! இந்தளவுக்கு மோசமா...சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவு...! :evil: :roll: hock:
- Sriramanan - 06-06-2005 Quote:கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எந்த வகையிலும் கருணா குழுவுடன் தொடர்பு படபட்டவர்களாக இருக்க முடியாது காரணம் அவர்கள் வட பகுதியைச் சேரந்தவர்கள். அவர்கள் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு உறுப்பினார்களாக இருந்தால் அவர்களை ஸ்ரீலஙக்கா படைகள் கைது செய்யவே முயற்சிப் பார்கள். கொல்வதை விட கைது செய்வதால் ஸ்ரீலங்கா படைகளுக்கு கொழும்பில் விடதலைப் புலிகளின் நடமாட்டங்கள் அல்லது செயற்பாடுகள் பற்றி ஓரளவிற்குத் தகவல்களைப் பெற முடியும். ஏதோ ஒரு வகையில் பதற்றத்தை ஏற்படுத்தவே இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுவதாகவே நான் நினைக்கிறேன். - Mathan - 06-06-2005 கொழும்பில் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்றும் ஒரு தமிழ் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக கிழக்கிலங்கையின் வன்செயல்கள் தலைநகருக்கும் பரவிவிட்டதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. பூநகரியைச் சேர்ந்த 27 வயதான வீரபாகு இந்திரக்குமார் என்னும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் நபரே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக படைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தையில் நெல்சன் பிளேஸ் என்னுமிடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசாரால் களுபோவில மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த நபர் அங்கு மரணமடைந்ததாக கூறப்படுகிறது. BBC தமிழ் - hari - 06-07-2005 எனது மகன் எந்த இயக்கத்தையும் சாராதவன் உறவினரை அழைத்துவரவே கொழும்பு சென்றான் கொச்சிக்கடையில் சுட்டுக் கொல்லப்பட்ட இமானுவெலின் தாயார் தெரிவிப்பு. செவ்வாய்கிழமை 7 யூன் 2005 டி.சிவராம் எனது மகன் எந்த இயக்கத்தினையும் சாராதவர். கனடாவில் இருந்து உறவினர் ஒருவர் வருவதனால் அவரை அழைத்து வருவதற்காகவே எனது மகன் சனிக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார் என்று கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவரான இமானுவெலின் தாயாரான தேவதாஸ் ஜெயராணி நேற்று கேசரிக்குத் தெரிவித்தார்.எனது மகனான இமானுவெலும் எமது உறவினரான பிரான்ஸிஸ் டெனிஸ்சியஸ்சும் ஒன்றாகவே கொழும்புக்கு சென்றனர். சனிக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்புக்கு புறப்பட்ட இவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சுடப்பட்டதாக அறிந்தோம். இவர்கள் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர்களல்ல. கடற்தொழில் செய்யும் எமது பிள்ளைகள் அப்பாவிகள். இவர்களை யார் கொன்றார்கள், ஏன் கொலை செய்தார்கள் என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியவில்லை என்றும் அவர் அழுது புலம்பியபடி தெரிவித்தார். இதேவேளை, கொச்சிக்கடையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களது சடலங்களை பொறுப்பேற்பதற்காக இவ்விளைஞர்களின் உறவினர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர்.சுட்டுக் கொல்லப்பட்ட பிரான்ஸிஸ் டெனிஸ்சியஸின் தாயும், தேவதாஸ் இமானுவெலின் தந்தையும் கொழும்பு வந்துள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது nitharsanam - sathiri - 06-07-2005 பழையபடி முனாஸ் தொடங்கீட்டானாக்கும் :evil: - anpagam - 06-08-2005 anpagam Wrote:மீண்டும் கொழும்பில் சுற்றிவளைப்புக்கள் விசேடமாக ஓடியவர்களுடன் சேர்ந்து குதூகலமாக நடக்கலாம்... :x மீண்டும் வேதாளம் மரத்தில் ஏறுதிறது. :| <!--emo&கொழும்பில் நடவடிக்கை எவ் (F) பயில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :twisted:
- vasisutha - 06-08-2005 :roll: :roll: - hari - 06-08-2005 கொழும்பில் F-File நடவடிக்கை. புதன்கிழமை 8 யூன் 2005 பிறைசூடி றமணன் <img src='http://www.nitharsanam.com/public/gallery/europe/presiden.jpg' border='0' alt='user posted image'> கொழும்பு மாவட்டம் "இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு பச்சைப் புலிகளின்" கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு முதலாவதாக F-File நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கொழும்பில் "இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு பச்சைப் புலிகளின்" ஆரம்பிக்கபட்டுள்ள F-File நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து கொழும்புக்கு வருவபவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களின் வருகையினைக் கட்டுபடுத்த முடியும் என்று இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு கருதுகின்றது. யாழ் மாவட்டத்தில் இருந்தும் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்தும் வரும் இளைஞர்களை இனங்கண்டு இவர்களைத் தொடர்சியாக F-File நடவடிக்கை மூலம் அழிப்பதன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் உறுப்பினர்களுக்கும் அச்சத்தை உண்டு பண்ண முடியும் எனவும் இலங்கையரசு கருதுகின்றது. இதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே கொழும்பில் தங்கியிருந்த பூநகரியைச் சேர்ந்த இளைஞன் வெள்ளவத்தையிலும் பாசையூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கொட்டாஞ்சேனையிலும் கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் எவரும் விடுதலைப் புலிகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரித்தவர்களோ அல்லது விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்புடையவர்களோ இல்லை. இந்தக் கொலைகள் மூலம் இலங்கையரச புலனாய்வுப் பிரிவினரும் அவர்களுடன் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் அரசிற்கான புலனாய்வு வேலைகளில் ஈடுபடும் ஈ.பி.டி.பி யினரும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகப் பீதிப்போரை ஆரம்பித்துள்ளார்கள். இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமானவர்கள் கொழும்பில் தங்கிருக்க மாட்டார்கள் என்று இவர்கள் கருதுகின்றார்கள். இதே போன்ற ஒரு நடவடிக்கையினை கொல்லப்பட்ட முத்தாலிப் கிழக்கு மாகாணத்திலும் வவுனியாவிலும் மேற்கொண்டிருந்தார். பிரேமதாசா ஜே.வி.பி யினரை அளிப்பதற்கு உருவாக்கிய "இலங்கை அரச புலனாய்வுப்பிரிவு பச்சைப் புலிகளிகள்" தற்போது சந்திரிகா அம்மையார் கொழும்பில் தமிழ் இளைஞர்களை அழிப்பதற்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் கொழும்பில் பல தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டேன் என்று உலகத்திற்குக் காட்டும் வேலையில் மூன்று அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று தமிழ்ப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் F-File நடவடிக்கை மூலம் எந்த ஒரு உண்மையான புலிகளையும் இவர்களால் கொழும்பில் கொல்ல முடியாது என்பதே உண்மையாகும். இந்த F-File நடவடிக்கை கிழக்கில் இருந்து கொழும்புக்கும் நகர்ந்துள்ளது. nitharsanam - Niththila - 06-09-2005 அப்ப தமிழீழத்திலுள்ள சிங்களவரை நாங்க கொல்லலாம் தானே :evil: |