06-08-2005, 10:17 AM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41226000/jpg/_41226477_couple203.jpg' border='0' alt='user posted image'>
பெண்களில் உடல் உறவின் போது பாலியல் உச்ச இனபம் ( Orgasm) பெறுதல் என்பது அவளின் சமூக, உளவியல் மற்றும் ஆண் துணையின் சக்தி பலம் பலவீனம் நம்பகத்தை என்பவற்றுக்கு அப்பால் அவள் காவும் பரம்பரை அலகுகள் சார்ந்தும் இருப்பதாக பிரித்தானிய உயிரியல் ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவொன்று தெரிவிக்கிறது...!
இவ் ஆய்விற்கு 19 - 83 வயது வரையான 4000 பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்..! இவர்களில் பாதிப்பேர் ஒத்த இரட்டையர்களாவர்....!
பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் பாலியல் உச்ச இன்ப நிலையையே அடைந்ததில்லை என்று கூறியுள்ளதுடன் பத்தில் ஒன்றுக்கும் அதிகமான பெண் உடலுறவின் (intercourse) போது மட்டும் பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் சுமார் 34% பெண்கள் சுய இன்பச் செயற்பாட்டின் (masturbation) போது பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்...!
ஆண்களில் உடலுறவின் (intercourse) போது வெறும் 2% பேரே பாலியல் உச்ச இன்பத்தைப் பெற முடியாதவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்...!
இதில் ஒத்த இரட்டைப் பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாலியல் உச்ச இன்ப நிலை அவதானிக்கப்பட்டதானது இவ்வியல்பு சார்பில் அப்பெண்கள் காவும் பரம்பரை அலகுகளுக்கும் (ஜீன்கள் - genes) தொடர்பு உண்டு என்பதை இனங்காட்டுவதாகவும்...அப் பரம்பரை அலகுகள் எவை என்று தீர்மானிப்பது பெண்களில் காணப்படும் பாலியல் உச்ச இன்பம் பெறுதல் குறைபாட்டைத் தீர்க்க வகை செய்யும் மருந்துகளைக் கண்டு பிடிக்க உதவும் என்றும் இவ்வாய்வு முடிவு பரிந்துரைக்கிறது...!
பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் மேலாண்மையும் அவள் சார்ந்த மதம் மற்றும் இனமும் மட்டும் செல்வாக்குச் செலுத்த முடியாத வகையில் உயிரியல் காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!
தகவல் ஆதாரம் மற்றும் மேலதிக தகவலுக்கு - http://kuruvikal.blogspot.com/

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>