06-07-2005, 09:07 AM
எனது மகன் எந்த இயக்கத்தையும் சாராதவன் உறவினரை அழைத்துவரவே கொழும்பு சென்றான் கொச்சிக்கடையில் சுட்டுக் கொல்லப்பட்ட இமானுவெலின் தாயார் தெரிவிப்பு.
செவ்வாய்கிழமை 7 யூன் 2005 டி.சிவராம்
எனது மகன் எந்த இயக்கத்தினையும் சாராதவர். கனடாவில் இருந்து உறவினர் ஒருவர் வருவதனால் அவரை அழைத்து வருவதற்காகவே எனது மகன் சனிக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார் என்று கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவரான இமானுவெலின் தாயாரான தேவதாஸ் ஜெயராணி நேற்று கேசரிக்குத் தெரிவித்தார்.எனது மகனான இமானுவெலும் எமது உறவினரான பிரான்ஸிஸ் டெனிஸ்சியஸ்சும் ஒன்றாகவே கொழும்புக்கு சென்றனர். சனிக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்புக்கு புறப்பட்ட இவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சுடப்பட்டதாக அறிந்தோம். இவர்கள் எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர்களல்ல. கடற்தொழில் செய்யும் எமது பிள்ளைகள் அப்பாவிகள். இவர்களை யார் கொன்றார்கள், ஏன் கொலை செய்தார்கள் என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியவில்லை என்றும் அவர் அழுது புலம்பியபடி தெரிவித்தார். இதேவேளை, கொச்சிக்கடையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களது சடலங்களை பொறுப்பேற்பதற்காக இவ்விளைஞர்களின் உறவினர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர்.சுட்டுக் கொல்லப்பட்ட பிரான்ஸிஸ் டெனிஸ்சியஸின் தாயும், தேவதாஸ் இமானுவெலின் தந்தையும் கொழும்பு வந்துள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
nitharsanam