06-07-2005, 08:38 AM
விமான போக்குவரத்து தொடங்குவோம்: விடுதலை புலிகள்
ஜூன் 7, 2005
கொழும்பு:
கிளிநொச்சியில் இருந்து தாங்களே விமானப் போக்குவரத்தை தொடங்கப் போவதாக விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்து வருகிறது. இந்த போர் நிறுத்தத்தை கண்காணிக்க நார்வே தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக விமானப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. விமானப் போக்குவரத்தை ஏற்படுத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சியிலிருந்து கிழக்குப் பகுதியிலுள்ள திரிகோணமலைக்கும், இதர பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்தை ஏற்படுத்த புலிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை அரசுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
எங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து விமானங்களை இயக்க இலங்கை அரசு தயக்கம் காட்டி வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாதிக்கும் வகையில் இது உள்ளது. இதனால் வேறு வழிகளை நாங்கள் கையாள வேண்டி வரும். கிளிநொச்சியில் இருந்து நாங்களே விமானப் போக்குவரத்தை தொடங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஆவின் விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்து வந்த டிஐஜி பிரதீப் பிலிப் மாற்றப்பட்டு போலீஸ் பயிற்சி மைய டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் பயிற்சி மைய டிஐஜியாக இருந்து வந்த சீமா அகர்வால் சென்னை காவல்துறை தலைமையக நிர்வாக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தட்ஸ்தமிழ்