06-07-2005, 01:38 AM
இளைஞன் Wrote:kuruvikal Wrote:Eswar Wrote:இதுவல்லவோ ஆய்வு. நன்றாக இருக்கிறது கட்டுரை. வாழ்த்துக்கள் இளைஞன்.
அந்தக் கட்டுரையில் கூட தவறான கருத்துகள் உள்ளன.. தமிழ் சமூகம் கற்றிராத துறைகளில் புலத்து இளைஞர்கள் கற்பதாக... அதில் டிஜிரல் ரெக்னோலொஜி...குறிப்பிடப்பட்டிருந்தது... இதே துறையில் தாயகத்தில் இருந்து புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியா சென்று படித்த அண்ணாமாரை எங்களுக்குத் தெரியும்...! அப்போ அவர்கள் தமிழ் சமூகத்தைச் சார்ந்தோர் இல்லையா...! தாயகத்திலும் இதே துறையில் இப்போ இளைஞர்கள்...கல்வி கற்கிறார்கள்...! குறைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல இந்தக் கருத்து...அந்தக் கருத்து வெளிக்கொணரப்பட்ட வடிவம் தவறானது என்பதைச் சொல்வதே நோக்கம்...!
நிறைகளைச் சுட்டிக்காட்டப் பலர் இருக்கலாம்..ஆனால் குறைகளைச் சுட்டிக்காட்டுபவனை குறைத்து மதிப்பிடுவதும் எமது சமூகமே....! அவனுக்கு என்ன தெரியும் அவருக்கு மேதாவி என்ற நினைப்பு..என்று...! குறைகள் நிவர்த்திக்கப்படவே சுட்டிக்காட்டப்படுகின்றன...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Digital Technology > Digital Media (Digital Animation, Digital Imaging, Online Media, etc), Information & Communication Technology போன்ற துறைகளாக பிரிகின்றன. இதற்குள் அடங்கும் ஒரு குறிப்பிட்ட துறையை ஈழத்தில் கற்றிருக்கலாம். கற்கவில்லையென்றும் நான் குறிப்பிடவில்லை. Digital Technology என்கிற பெயரூடான துறையாக அது இருப்பதற்கான வாய்ப்பும் குறைவு. (அவர்கள் தமிழ் சமூகம் சார்ந்தோர் அல்ல என்று குறிப்பிடப்படவில்லை - இங்கே புலம்பெயர் தமிழ் சமூகம் என்பதே தலைப்பு) ஆனால் இந்தத் துறைசார்ந்த முழுமையான தேடல் என்பது புலம்பெயர் இளம் சமூகத்தூடே தான் நிகழ்ந்திருக்கின்றது. இன்று வன்னிரெக் போன்றன கூட புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் தொழில்நுட்ப (அறிவு) பலத்துடனே நிகழ்த்தப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இன்னொரு விடயத்தைக் குறிப்பிட முன்னர் மறந்துவிட்டேன். இன்று (இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போர் நிறுத்த மீறலாகக் கருதப்படும்) புலிகளின் விமானப்படைக்கான தொழில்நுட்ப அறிவு என்பது புலம்பெயர்ந்த இளம் சமூகத்தின் மூலமே பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே விமானத்திற்கான முயற்சிகள் ஈழத்தில் செய்யப்பட்டனதான். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் அது எந்தளவுக்கு வெற்றி அளித்தது என்பதும், அதற்கான அறிவு எங்கிருந்து பெறப்பட்டது என்பதும் தெரியாது. ஆனால் இன்று புலம்பெயர்ந்த இளைஞர்கள் குறிப்பாக விமானத்துறையில் பயின்ற இளைஞர்கள் இதில் பங்காற்றியுள்ளார்கள் என்பது உண்மை. இதுகூட புலம்பெயர் சமூகத்தின் முன்னேற்றம் தான்.
[quote]புலம்பெயர் தமிழ் இளைஞர்களின் கல்வி சார்ந்த தேடல். துறை சார்ந்த வளர்ச்சி. தொழில் சார்ந்த முன்னேற்றம். இதுவரை தமிழ் சமூகம் கற்றுக்கொள்ளாத துறைகளூடான பயணம் என்பது முன்னேற்றமே
http://www.admtc.lk/tc/dvt/
விளக்கத்துக்கு நன்றி...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

