06-06-2005, 09:39 PM
Quote:="Nitharsan
நாங்கள் யாருக்கும் விபச்சாரி பட்டம் பகாடுக்கவில்லை ஆனால் நீங்கள் கேட்கும் அல்லது நீங்கள் சொல்லும் பெண்ணடிமை என்பது. பாலியல் நடத்தைகளை தான் என்றால்....??? அந்நதப்பட்டம் தானாகவே சம்பந்தப்பட்டவர்களை அணைத்துக்கொள்ளும்.....
Quote:நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள் என்ன கேள்விக்கு நாங்கள் பதிலளிக்க வில்லை? எமது விளக்கங்களை எடுத்துக்காட்டுக்களை புரிந்து கொள்ள முடியாத உங்களையும் உங்களுடன் இங்கு பெண்ணிலைவாதம் பேசும் ஆண்களையும் என்ன வென்று சொல்ல....யாதார்த்தம் எதுவோ அதை தான் எம்மால் சொல்ல முடியும்..[/quote]
அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக:கு எமது விளக்கங்களும் எடுத்துக்காட்டுக்களும் செவிடன் காதில் ஊதிய சங்கே!
நிதர்சன் உங்கள் கருத்துக்களை முழுமையக ஒருதரம் வாசியுங்கள்.
எங்கெங்கு விபச்சாரிகள் என்ற பதம் எத்தனை பேருக்கு இட்டுள்ளீர்கள் என்பது புரியும்.
உங்களுக்கு இங்கு நானோ கிருபனோ ஏனைய யாருமே பாலியல் நடத்தையும் பாய்மதலும் கம்பியும்தான் பெண்விடுதலை சமத்துவம் என்று கருத்து எழுதவில்லை. இதிலிருந்தே உங்களது அதிமேதாவித்தனம் புரிகிறது.
ஒருகருத்தை சரியாக உள்வாங்காது அடிபிடி விபச்சாரம் பெண்களெல்லாம் நாசகாரிகள் என்றெல்லாமான வார்த்தைகளை மட்டும் கொட்டிவிடுவதால் உங்கள் திருகுதாளங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டதாய் அர்த்தப்படுத்திக் கொண்டு உங்கள் தெளிவை அடிக்கடி எமக்கு நிறுவிக்கொள்வது உங்களை நாங்கள் எடைபோடவே உதவியுள்ளீர்கள். உங்கள் அடிமனது ஆணாதிக்கம் மிக்க சராசரி ஆணாகவே உங்களையும் பார்க்கிறேன். மற்றபடி உங்களால் சமூகத்திற்கான சரியான தீர்வு திருத்தம் எதையுமே தரமுடியாது. திரும்பத்திரும்ப மெய்ப்பிக்கின்ற தெளிவின்மைகூட புரியாமல் நிதர்சன்.
நான் உங்களிடம் கேட்ட கேள்விகளையும் கருத்துக்களையும் திரும்ப குவாட்பண்ணி போட்டு இன்னொரு 2பக்கத்தை வீணாக்கி வாசகர்களின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டாமேயென அவற்றை மீள்பதிவு செய்யவில்லை. எனது கேள்விகளே புரியாமல் வெட்டு ஒட்டு பண்ணி உங்கள் கருத்தென்றோ எதையோ எழுதிவிட்டு நானும் எழுதிவிட்டேன் என்று இறுமாந்து கொள்வதும் பெருமைப்படுவதும் உங்கள் பலமாக கருதும் உங்கள் விளக்கமில்லா விடைகளுக்கு பதில் தருவதைவிட நல்ல கருத்துக்களை வாசிப்பதில் நேரத்தை செலவளிப்பது மேல்.
யதார்த்தம் எது யதார்த்தத்தில் ஆதிக்க குணம் கொண்ட உங்கள் போன்ற ஆட்களின் குணம்தான் உங்கள் வரையிலான யதார்த்தம். யதார்த்தம் என்பதன் பொருள் சமகால நடைமுறையை என்றுதான் எனக்கு சொல்லித்தரப்பட்டது. பெண் சமத்துவம் பெண்ணின் பிரச்சனைகள் தொடர்பான சமகாலத்தைத்தான் உங்கள் கருத்துக்களில் பொய்ப்பரப்புரைக்து தந்துள்ளேன்.
சமகாலத்தை சுகந்திரமாக எடுத்து வாதிடும் உங்கள் வல்லமையை என்னவென்பது ?
உங்கள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் எனது கேள்விக்கான பதிலாக நீங்கள் தரவில்லை. உங்கள் தவறான விளக்கங்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தல்தான் செய்தீர்கள்.
இங்கு கதைக்கப்படுவது புலம்பெயர் பெண்களென்று நீங்கள் தாளம் போட்டால் அதற்கும் நான் சொல்கிறேன். தமிழ்ப்பெண்கள் என்ற நிலையிலிருந்துதான் கருத்துக்களை எழுதுகிறோம்.
இல்லை தாயகப்பெண்களைப்பற்றி கதைக்கவில்லை நாமென்று உங்களைக் காத்துக்கொள்ள தப்பித்துக் கொள்ளும் தத்துவத்தை இங்கு விளக்க வரவில்லை.
பிணங்களை ஆழும் உங்களுக்கு மனங்களைப் புரிந்து கொள்ள வலுவில்லை.
:::: . ( - )::::

