06-06-2005, 08:25 PM
Quote:கொழும்பில் சுட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் இயக்க புலனாய்வாளர்கள் என்றும் அரசின் புலனாய்வாளர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இது நடக்கின்றது என்று ஒரு பேச்சு நிலவுகின்றது. இவர்கள் கருணா குழுவை சேர்ந்தவர்கள் அதனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இன்னொரு பேச்சு.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எந்த வகையிலும் கருணா குழுவுடன் தொடர்பு படபட்டவர்களாக இருக்க முடியாது காரணம் அவர்கள் வட பகுதியைச் சேரந்தவர்கள்.
அவர்கள் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு உறுப்பினார்களாக இருந்தால் அவர்களை ஸ்ரீலஙக்கா படைகள் கைது செய்யவே முயற்சிப் பார்கள். கொல்வதை விட கைது செய்வதால் ஸ்ரீலங்கா படைகளுக்கு கொழும்பில் விடதலைப் புலிகளின் நடமாட்டங்கள் அல்லது செயற்பாடுகள் பற்றி ஓரளவிற்குத் தகவல்களைப் பெற முடியும். ஏதோ ஒரு வகையில் பதற்றத்தை ஏற்படுத்தவே இது போன்ற தாக்குதல்கள் நடைபெறுவதாகவே நான் நினைக்கிறேன்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

