06-06-2005, 12:27 PM
Jude Wrote:kuruvikal Wrote:மேலே யூட் கண்டெடுத்த சிற்பத்தில் உள்ளது போல்...மனிதர்களும் விலங்கு நடத்தைக்குள் சென்று... கீழ்த்தரமான பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையைக் காண்பிப்பின் வரும் தீமைகள் குறித்தும் சொல்வதும் அவசியம்...!
அந்த வகை பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை தரும் பல நோய்களில் ஒன்றின் அறிகுறி... இது
.
குருவிகள்
பாலியல் கல்வி தேவை எள்று சொன்னேனேயன்றி பாதுகாப்பற்ற பாலியல் தேவை என்று சொன்னேனா? பாலியல் கல்விக்கும் பாதுகாப்பற்ற பாலியலுக்கும் வேறுபாடு காணத்தெரியாத அளவுக்கு பகுத்தறிவு குறைந்தவராக தாங்கள் தெரியவில்லையே?
மேலும் மேற்படி சிற்பம், தமிழரின் போற்றத்க்க பேரரசன் புலிக்கொடியோடு இமயம் முதல் இந்தோனேசியா வரை ஆட்சி செய்த இராஜஇராஜசோழன், தமிழ் சிற்பிகளை கொண்டு காலத்தால் அழியா வண்ணம் படம் பிடித்த தமிழரின் வாழ்க்கை முறைiயை பிரதிபலிக்கிறது
kuruvikal Wrote:எந்த மருத்துவ நூலாகட்டும் உயிரியல் நூலாகட்டும் கட்டுப்பாடற்ற பாலியல் பற்றிக் கதைத்தால் அதன் தீமைகளையும் சொல்ல மறப்பதில்லை...யூட் மறந்திட்டார்... நாங்க சின்ன உதாரணம் காட்டுறம்...! வாய் மூலம் செய்யும்
குருவிகள்
வாய் மூலமல்லாத, ஆனால் நோயுள்ள கணவனுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணுக்கும் பாலியல் நோய் வந்தால் வாயென்ன உடலில் பல பாகங்களிலும் மேற்படி நோய்ககுறிகள் வரலாம். இதற்காக கணவருடன் மனைவியர் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப் போகிறீர்களா? குறைஅறிவால் தவறான கருத்துக்களை பரப்பலாமா?
கட்டுப்பாடற்ற பாலியலை யாரும் இங்கே விரும்பவில்லை. அது தங்களது தவறான கருத்து. நாம் சொல்வதெல்லாம் மனைவியுடன் வாழ முடியாத கணவர்கள் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். தனிமையில் வாடும் பெண்கள், மற்ற ஆண்களை பாதுகாப்பற்ற முறையில் நாடாமல் இருக்க, அவர்களுக்கு சுயஇன்பம் பற்றிய அறிவு வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு வேண்டும். இவ்வாறாக பாலியல் நோய்கள் சமூகப்பிரச்சினைகள் தடுக்கப்பட முடியும். மற்றும் பாலியல் கல்வி அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்பது தான். இவற்றை தான் தாங்கள் எதிர்க்கிறீர்கள்.
kuruvikal Wrote:பாலியல் சேட்டைகளால் பரவும் நோய்...மல்ரிபிள் ஓகசம் தேடுபவர்களுக்கு இது இலவசமாகக் கிடைக்கலாம்...!
திரும்பவும் குறைஅறிவால் தவறான கருத்தை முன் வைக்கிறீர்கள் நோயற்ற கணவன் மனைவியர் மனைவி உச்ச இன்பம் பலமுறை அனுபவிக்கும் வகையில் பாலியலை அனுபவிப்பதனால் எவருக்கும் எந்த நோயும் வராது. மாறாக நோயுள்ள கணவனுடன் மனைவி உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்குள்ள மோசமான நோய் மனைவிக்கும் வரும்.
<b>கணவன் - மனைவி உறவில் ஒவ்வொரு முறையும் கணவன் பாலியல் உச்ச இன்பத்தை அனுபவிக்கிறான்.</b> மனைவியோ பாலியல் அறிவுடைய ஒரு கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அந்த சந்தர்ப்பத்தையே பெறுகிறாள். <b> பாலியல் அறிவுக்குறைவு காரணமாக தமிழ் பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த அனுபவமே கிடைப்பதில்லை</b>. இது தான் குருவிகளின் ஆண் பெண் சமத்துவம்.
பாலியல் கல்வி என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...! உங்களுக்கு பாலியல் கல்வி என்றால் உச்ச பாலியல் இன்பத்தை அடையும் வழி முறைகளையும் சுய இன்பத்தை அடையும் வழிமுறைகளையும் சொல்லும் கல்வி என்பதாகத்தான் அர்த்தம் தெரிகிறது...! ஆனால் உண்மையில் அதுவல்ல பாலியல் கல்வி...! பாலியல் கல்வி என்பது வெறும் பாலியல் செயற்பாட்டை மட்டும் விளக்குவதல்ல... அதன் உள உடற் செயற்பாடுகள்.... தாக்கங்கள்...குறைபாடுகள்... நோய்கள்.. அவை பரவும் முறைகள்...தடுக்கும் முறைகள்...பாதுகாப்பான பாலியல் தொடர்புகள்..என்று ஒரு பரந்த கல்வி...!
(Half of young Americans to get sex diseases..people, they need realistic sex education that teaches them how to prevent STDs and unwanted pregnancies. It is essential to have medically accurate information about condoms and other contraceptive methods, and guidance on how to access appropriate prevention, testing and treatment services)
(நீங்கள் இதுவரை எங்காவது பாதுகாப்பான பாலியல் தொடர்பு என்றால் என்ன என்பது குறித்து சொல்லி இருக்கிறீர்களா யூட்...! நீங்கள் அதை நாங்கள் சுட்டிக்காட்டும் வரை கருத்தில் எடுக்கவே இல்லை என்பதற்கு நீங்கள் போட்ட படம் சாட்சி...!)
சுய இன்பத்தின் தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் குறிப்பிட்ட கணவனும் மனைவியும்...சுய இன்பம் கூட கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைக்குத் தூண்டுதலாக அமையலாம்...அதன் வழி வந்தவர்கள்தான் ஓரினப்பாலியல் சேர்க்கை உள்ளோர்...! அதுமட்டுமன்றி சுய இன்பம் என்பது கணவன் மனைவி பாலியல் ஈடுபாட்டைக்கூட உள உடல் ரீதியில் பாதிக்கலாம்...! அப்படி உள ரீதியில் பாதிக்கப்பட்ட பலர் சமூகத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்...!
நோய் தொற்று என்பது எப்போதும் தொற்றுள்ளவரிடம் இருந்துதான் வர வேண்டும் என்பதல்ல...தூய்மையற்ற பாலியல் தொடர்பாலும் வரலாம்...முதலில் பாலியல் தொடர்பான நோய்கள் அனைத்தையும் தெளிவாக அறிந்து வந்து கருத்தை முன் வையுங்கள்..! பெண்களில் கர்ப்பபை மற்றும் பெண்ணுறுப்புத் தொடர்பான புற்றுநோய்களுக்கும் தீவிரமான பாலியச் செயற்பாடுகளுக்கும் தொடர்புகள் உண்டு...!
யூட் உங்களுக்கு மற்றவர்களை குறைத்து மதிப்பிடத் தெரிகிறதே தவிர நியாய பூர்வமான கருத்தை அளிக்க அக்கறை இருக்கவில்லை... உங்களுக்குக் கருத்துச் சொல்ல பாலியலில் பிஎச்டி முடித்திட்டு வர வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்...! உங்களுக்குள் உள்ள தெளிவற்ற விடயங்களைத் தெளிவாக்குங்கள்... மற்றவர்களின் கருத்தில் உள்ள தெளிவற்றதைச் சுட்டிக்காட்டுங்கள்...மாறாக மற்றவர்களை கருத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட வகையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றோம்..! நீங்களும் கிருபன்ஸும்... இதை எனிக் கைவிடுவது நல்லது கருத்துக்களுக்கு...! உங்களைப் போல எங்களாலும் விமர்சிக்க முடியும்...ஆனால் அது கருத்துக்கு எந்த விதத்திலும் உதவாது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

