09-27-2003, 03:32 PM
வாரிதியுடன் ஓப்பிடும்போது எனக்குத்தெரிந்த ஓரு பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.வினாயகமூர்த்தி அவர்கள் ஒரு நல்ல பேச்சாளார். சைவம் பற்றியும் இந்;துமதம் பற்றியும் அவர் பேச்செடுத்தால் வார்த்தைகள் எங்கிருந்து வந்துவிழுகின்றன என்று எண்ணத்தோன்றும். ஆனாலும் கம்பவாரிதிபோல் அவரிற்கு நக்கல்கள் நையாண்டிகள் வார்த்தை வழுக்கல்கள் இட்டுப்பேசத்தெரியாது. அவருடைய பேச்சின் ஒவ்வொரு சொல்லிலும் பல்லாயிரக்கணக்கான அர்தங்கள் பொதிந்திருக்கும். பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளர் எனினும் தமிழ் அவரிடம் புகுந்துவிளையாடும். பல ஆலயங்களில் பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் பத்துநாட்களும் அந்த பேராசிரியர் கதாப்பிரசங்கம் செய்தாலும் ஒரு நாள் கம்பவாரிதி வரும்போது வந்துகுவியும் மக்கள்வெள்ளம்போல் அமைவதில்லை. ஏன் என்று இன்றுவரை விடைதெரியவில்லை. தனது பேச்சுத்தன்மையைவிட பெண்களை கவர்வதற்கு அந்த வாரிதி வார்த்தைகளை வளைக்கின்றார். பேராசிரியரோ மக்கள் மத்தியில் கருத்துக்களை பரவமுயல்கின்றார் எப்போதுமே நாம் சிலவற்றை விலக்கிவைத்துக்கொள்வோம். அந்தவகையில் இதுவும் ஒன்றோ ?
[b] ?

